நிதிக்கட்டுப்பாடு அவசியம்; இந்தியா போன்ற வறுமை நாட்டில் இலவசங்களை நிராகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

By Pothy RajFirst Published Aug 11, 2022, 2:32 PM IST
Highlights

இந்தியா போன்ற வறுமை நிலவும் நாட்டில் இலவசங்களை நிராகரிக்க முடியாது. அதேநேரம், இலவசங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற வறுமை நிலவும் நாட்டில் இலவசங்களை நிராகரிக்க முடியாது. அதேநேரம், இலவசங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கும் இலவசங்கள், தேர்தலுக்கு பின் வழங்கும் இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், வரையறை செய்ய  வேண்டும். விதிமுறைகளை மீறி நடக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை பறித்து, அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே பொதுநலன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஹீமா கோலி, கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தன்னையும் ஒருவாதியாக ஏற்றுக்கொள்ளக் கோரி ஆம் ஆத்மி கட்சி நேற்று மனுத்தாக்கல் செய்தது.

பிரதமர் பதவிக்கான தரத்தைக் குறைக்காதீர்கள்: பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினார். இலவசங்கள் விவகாரத்தில் தீவிரமான ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்க, மத்திய அரசு, நிதி ஆயோக், நிதி ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த 3ம் தேதி அமைத்தது.

இந்த வழக்கில் சொலிசிட்ட ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில் “ இலவசங்கள் வழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் நாசாகும். வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை நன்றாக சிந்தித்து அளிக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி தரப்பில் வாதிட்ட அபிஷேக் மனு சிங்வி “ மனுதாரருக்கும், பாஜகவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பாஜகவுக்கு இலவசங்கள் வழங்குவது பிடிக்கவில்லை. அதைத்தான் மனுதாரர் பிரதிபலிக்கிறார். நலத்திட்டங்களுக்குகூட பாஜக எதிராக இருக்கிறது. சமூகத்தில் கடைநிலையில் இருப்போருக்கு வழங்குவது கூட இலவசங்கள் என முத்திரைகுத்தப்படுகிறது. இலவச கல்வி, குடிநீர்,சுகாதார வசதிகள் வழங்குவது ஓர் அரசின் அரசியலமைப்புக் கடமை. எவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படுவது இலவசமா” என்று கேட்டார்.

‘நாய்கூட இந்த சாப்பாட்டை சாப்பிடாது’: தரமற்ற உணவால் உ.பி. போலீஸ் உணவுகத்தின் போலீஸ்காரர் ரகளை

தலைமை நீதிபதி ரமணா அமர்வில் இடம்பெற்றிருந்த 2நீதிபதிகளில் ஹீமா கோலி இன்று வரவில்லை. ஆதலால், கிருஷ்ணா முராரி மட்டும் இருந்தார். தலைமை நீதிபதி ரமணா கூறுகையில் “ இலவசங்கள் வழங்குவதற்காக எந்தக் கட்சியையும் நாங்கள் ஆங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. அது ஜனநாயகத்து்கு விரோதமான செயல். பொதுவாக சட்டப்பேரவையில் எடுக்க வேண்டிய முடிவுகளில் தலையிட நான் மிகவும் தயங்குவேன். நான் ஒரு பழமைவாதி, சட்டப்பேரவை அல்லது நிர்வாகத்தில் தலையிட எனக்கு விருப்பமில்லை

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது, தேர்தலுக்கு பின் வழங்குவது என்பது தீவிரமான விஷயம். இதில் நிதிக் கட்டுப்பாடு என்பது அவசியம். அதேநேரம், நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது.

அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது கவலைக்குரியதுதான். ஆனாலும் இந்தியா போன்ற வறுமைநிலவும் நாட்டில், இந்த இலவசங்களை நிராகரிக்க முடியாது. அதேநேரம் பொருளாதாரத்தில் ஏற்படும் பணஇழப்பை, மக்கள் நலத்திடங்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்படுத்துவதும் சமநிலை ஏற்படுத்துவதும் அவசியம். ஆதலால் இரு தரப்பின் கருத்தையும் கேட்பது அவசியமாகும் “ எனத் தெரிவித்தார்

ரேஷன் கடைகளில் தேசியக் கொடி கட்டாய விற்பனை: ராகுல் கொந்தளிப்பு: மத்திய அரசு மறுப்பு

இந்த வழக்கு வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

click me!