
மெஹ்திப்பட்டினம் சந்திப்பில் மிராஜ் எக்ஸ் சாலையில் உள்ள கிங்ஸ் உணவகத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இரண்டு சிலிண்டர்கள் தவறுதலாக வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறுகாரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தவலல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை உடனடியாக அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இருவர் லேசான காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக உணவகத்தின் உரிமையாளரை ஆசீப் நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் படிக்க:இரும்பு வியாபாரி வீட்டில் ஐடி சோதனை..! இரவு பகலாக நடைபெற்ற பணம் எண்ணும் பணி.. ரூ.390 கோடி சொத்துக்கள் பறிமுதல்