பிரதமர் மோடி, சூனியம், கறுப்பு மேஜிக் ஆகிய வார்த்தைகளைப் பேசி பிரதமர் பதவிக்கான தரத்தையே கெடுப்பதை முதலில் அவர் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளாசியுள்ளார்.
பிரதமர் மோடி, சூனியம், கறுப்பு மேஜிக் ஆகிய வார்த்தைகளைப் பேசி பிரதமர் பதவிக்கான தரத்தையே கெடுப்பதை முதலில் அவர் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளாசியுள்ளார்.
நாட்டில் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, சமையல் சிலிண்டர், பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து கடந்த 5ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கறுப்பு ஆடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
‘நாய்கூட இந்த சாப்பாட்டை சாப்பிடாது’: தரமற்ற உணவால் உ.பி. போலீஸ் உணவுகத்தின் போலீஸ்காரர் ரகளை
இந்த போராட்டம் குறித்து பிரதமர் மோடி நேற்று பானிபட் நகரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2ஜி எத்தனால் ஆலை திறப்பு நிகழ்ச்சியி்ல் மறைமுகமாகமாகச் சுட்டிக்காட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் “ கடந்த 5ம் தேதி சிலர் கறுப்பு மேஜிக்கில் ஈடுபட்டனர். கறுப்பு ஆடை அணிந்து தங்கள் விரக்தியை போக்கலாம் என நினைக்கிறார்கள். கறுப்பு மேஜிக்கின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. கறுப்பு மேஜிக், சூனியம், மாந்தரீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது” எனத் தெரிவித்தார்.
கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் முடிவு
இதற்கு பதிலடியாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி , பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்த தேசத்தில் நிலவும் பணவீக்கம் உயர்வு, வேலையின்மை அதிகரிப்பை பிரதமரால் பார்க்க முடியவில்லையா.
பிரதமர் பதவிக்கான தரத்தைக் குறைக்கும் வகையில் பேசுவததை நிறுத்துங்கல். உங்கள் கறுப்பு செயல்களை மறைக்கப் பயன்படும் மூடநம்பிக்கைகளான கறுப்பு மேஜிக் பற்றி பேசி நாட்டை தவறாக வழிநடத்தாதீர்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் தேசியக் கொடி கட்டாய விற்பனை: ராகுல் கொந்தளிப்பு: மத்திய அரசு மறுப்பு