‘நாய்கூட இந்த சாப்பாட்டை சாப்பிடாது’: தரமற்ற உணவால் உ.பி. போலீஸ் உணவுகத்தின் போலீஸ்காரர் ரகளை

By Pothy Raj  |  First Published Aug 11, 2022, 11:38 AM IST

உத்தரப்பிரதேசத்தில் உள்ள போலீஸ் உணவுகத்தில் சாப்பாடு மிகவும் தரமற்றதாக வழங்கப்பட்டதைக் கண்டித்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடுமையான வார்த்தைகளால் பேசி, போராட்டம் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் உள்ள போலீஸ் உணவுகத்தில் சாப்பாடு மிகவும் தரமற்றதாக வழங்கப்பட்டதைக் கண்டித்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடுமையான வார்த்தைகளால் பேசி, போராட்டம் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

உத்தரப்பிரேசத்தின் பிரோசாபாத்தில் உள்ள போலீஸ் லைன் உணவுகத்தில்தான் மனோஜ்குமார் என்ற கான்ஸ்டபிள் போராட்டம் நடத்தியுள்ளார்.

Tap to resize

Latest Videos

உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்ககு.

கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் முடிவு

சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வரும் இந்த வீடியோவில் போலீஸ் கான்ஸ்டபிள் மனோஜ் குமார் கையில் தட்டில் உணவுடன், கண்ணீருடன் பேசும் காட்சி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில் கான்ஸ்டபிள் மனோஜ் குமார் கூறுகையில் “ தண்ணி மாதிரி இருக்கு பருப்பு குழம்பு, ரொட்டி வேகவே இல்லை. இப்படிப்பட்ட சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது. இந்த தரமற்ற உணவு குறித்து பலமுறை புகார் செய்தும், மூத்த கண்காணிப்பாளர் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

12 மணிநேரம் கால் கடுக்க போலீஸார் பணி செய்து வந்துவிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உணவு இதுதானா. இந்த உணவை நாய்கூட சாப்பிட முடியாது. எங்களாலும் சாப்பிட முடியாது. எங்கள் வயிற்றில் எதுவுமே இல்லாமல் எப்படி நாங்கள் வேலை செய்ய முடியும். உ.பி. முதல்வர் ஆதித்யநாத் போலீஸாருக்கு படிகள் உயர்த்தப்படும்,

ரேஷன் கடைகளில் தேசியக் கொடி கட்டாய விற்பனை: ராகுல் கொந்தளிப்பு: மத்திய அரசு மறுப்பு

அவர்களுக்கு தரமான, சத்தான உணவுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இன்னும் போலீஸ் உணவகத்தில் தரமற்ற உணவுதான் வழங்கப்படுகிறது. மூத்த கண்காணிப்பாளர், டிசிபி, ஆகியோர் ஊழல் செய்கிறார்கள். இந்த அதிகாரிகளால்தான் போலீஸ் துறையில் உள்ளவர்களுக்கு தரமற்ற உணவு கிடைக்கிறது  ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

போஸீஸ் கான்ஸ்டபிள் அலிகாரைச் சேர்ந்தவர். தற்போது பிரோசாபாத்தில் பணியாற்றி வருகிறார். தரமற்ற உணவு குறித்து அதிகாரிகளிடம் மனோஜ் குமார்  புகார் செய்யவே அதற்கு உணவுகத்தின்மேலாலாளர் மிரட்டியுள்ளார்.  இதையடுத்து, மனோஜ் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில் “ தரமற்ற உணவு சப்ளை செய்யப்படுவதாக கூறியபின்பும் யாருமே என் குறையைக் கேட்கபோலீஸ் துறையில் அதிகாரிகள் இல்லை. கேப்டன்சார் கூட என் பிரச்சினையை காது கொடுத்து கேட்கவில்லை, என்பதால்தான் இங்கு போராட்டம் நடத்துகிறேன்.

பாஜக வலுவடைய கூடாது.. சீரும் அகிலேஷ் யாதவ் ! புதிய கூட்டணி ஆரம்பமா?

இங்கு கேப்டன்சார் வருமப்போது இங்கு பரிமாறப்படும் ரொட்டி, பருப்பு குறித்து காண்பித்து சாப்பிட வேண்டும் என்று கூறுவேன். அப்போதுதான் இதுபோன்ற தரமற்ற உணவை மற்ற போலீஸார் சாப்பிடுவார்களா எனத் தெரியும்.  குழந்தைகளால் இந்த உணவைச் சாப்பிடமுடியுமா”எ னத் ெதரிவித்தார்

மனோஜ் குமார் பிரச்சினை செய்ததையடுத்து, மற்ற போலீஸார் வந்து மனோஜ் குமாரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியதையடுத்து, இந்த விவாகாரம் குறித்து விசாரிக்க பைசாபாத் போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்

click me!