rahul: national flagindia: ரேஷன் கடைகளில் தேசியக் கொடி கட்டாய விற்பனை: ராகுல் கொந்தளிப்பு: மத்திய அரசு மறுப்பு

By Pothy Raj  |  First Published Aug 11, 2022, 9:50 AM IST

பாஜக தேசப்பற்றை ரேஷன் கடைகளில் விற்கிறது, ஏழைகளின் சுயமரியாதையை வேதனைப்படுத்துகிறது என்று, ரேஷன் கடைகளில் தேசியக் கொடியை ஏழை மக்களை கட்டாயப்படுத்தி பணம் கொடுத்து வாங்கக் கூறும் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.


பாஜக தேசப்பற்றை ரேஷன் கடைகளில் விற்கிறது, ஏழைகளின் சுயமரியாதையை வேதனைப்படுத்துகிறது என்று, ரேஷன் கடைகளில் தேசியக் கொடியை ஏழை மக்களை கட்டாயப்படுத்தி பணம் கொடுத்து வாங்கக் கூறும் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

வரும் 15ம் தேதி இந்த தேசம் 75-வது சுதந்திரத்தினத்தைக் கொண்டாட  ஆயத்தமாகி வருகிறது, இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

ஹரியாணா பானிபட்டில் ரூ.900 கோடி 2ஜி எத்தனால் ஆலை: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பில் லட்சக்கணக்கான கொடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையி்ல் ரேஷன் கடையி்ல் பொருட்கள் வாங்க வரும் ஏழை மக்களிடம் ரூ.20 செலுத்தி கட்டாயமாகப் பெற்றுக்கொண்டு தேசியக் கொடி விற்கப்படுகிறது என்றும், தேசியக் கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படும் எனப் புகார் எழுந்தது.   இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. வருண் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் “மூவர்ணக் கொடி என்பது நமது கவுரவம், பெருமை. இது இந்தியர்கள் அனைவரின் மனதிலும் இருக்கும். தேசபக்தியை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் கடைகளில் ஏழைகள் பொருட்கள் வாங்க வரும்போது, அவர்களிடம் ரூ.20 கட்டாயமாகப் பெற்றுக்கொண்டு தேசியக் கொடி விற்பது வெட்கக்கேடு” எனத் தெரிவித்திருந்தார்.

ஆக.26 நிறைவடைகிறது என்.வி.ரமணாவின் பதவிகாலம்… அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!!

ஆனால்,மத்திய அ ரசு தரப்பில் அளித்த பதிலில் “ ரேஷன் கடைகளில் ரூ.20 பெற்றுக்கொண்டு தேசியக் கொடி விற்பனை  செய்யுங்கள் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் அரசின் விதிகளை மீறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் 80 கோடி மக்களும் ஒவ்வொரு மாதமும் ரேஷன்  பொருட்கள் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் கூறுகையில் “ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடியோவில் பேசும்நபர் ஹரியாணா மாநிலம், கர்னால் மாவட்டம், தாதுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு படுக்கை வசதி, ஏசி3ம் வகுப்பில் சலுகை மீண்டும் வருகிறதா?

தவறான தகவல்களை பரப்பிய ரேஷன் கடை உரிமையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பயனாளிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்தியஅரசு உத்தரவி்ட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது

click me!