indian railways: ரயிலில் மூத்த குடிமக்களுக்கு படுக்கை வசதி, ஏசி3ம் வகுப்பில் சலுகை மீண்டும் வருகிறதா?

By Pothy Raj  |  First Published Aug 11, 2022, 9:17 AM IST

ரயிலில் குடிமக்களுக்கு படுக்கை வசதி மற்றும் ஏசி3-ம் வகுப்பில் டிக்கெட் சலுகைகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும், இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


ரயிலில் குடிமக்களுக்கு படுக்கை வசதி மற்றும் ஏசி3-ம் வகுப்பில் டிக்கெட் சலுகைகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும், இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா தொற்றின்போது, ரயில் பயணத்தைக் குறைப்பதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்,மாணவர்கள் உள்ளிட்ட 11  பிரிவினருக்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டணச் சலுகையை ரயில்வே திரும்பப் பெற்றது. ஆனால், கொரோனா தொற்று குறைந்து, இயல்புநிலைக்கு அனைத்தும் திரும்பிய நிலையிலும் இந்த கட்டண சலுகை ரத்து தொடர்ந்து வருகிறது.

Tap to resize

Latest Videos

சூப்பரூ! அம்மாவும் பையனுமா! ஒரே நேரத்தில் தேர்வு எழுதி அரசுப் பணிக்குத் தேர்ச்சி

மழைக்காலக் கூட்டத்தொடரில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் திரும்ப வழங்குவதற்கு சாத்தியங்கள் குறைவு. ரயில்வே பெரும் இழப்பில் செல்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

ஹரியாணா பானிபட்டில் ரூ.900 கோடி 2ஜி எத்தனால் ஆலை: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இந்நிலையில் பாஜக தலைவர் ராதா மோகன் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் கடந்த 4ம் தேதி நடந்துத. இந்தக் கூட்டத்தில்  மத்திய அரசுக்கு ரயில்வே டிக்கெட் கட்டணம் குறித்து நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், “கொரோனா தொற்றிலிருந்து பொருளதாரம் மீண்டுவரும் நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகையை ரயில்வே திரும்பித் தர வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு முன்பாக மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டணச் சலுகையாக 40 முதல் 50 சதவீதம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனாவால் அந்த சலுகை ரத்து செய்யப்பட்டது.

சபரிமலை பிரசாதம் - பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்..கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு!

குறைந்தபட்சம் மூத்த குடிமக்களுக்கு 2ம்வகுப்பு படுக்கை வசதி, ஏசி 3ம்வகுப்பில் கட்டணச் சலுகை வழங்கிட வேண்டும். இதனால் உண்மையிலேயே சலுகை தேவைப்படும், மூத்த குடிமக்கள் பயன் அடைவார்கள். இந்த கட்டணச் சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
ரயில்வே துறை ஆண்டுதோறும் மூத்த குடிமக்களுக்காக கட்டணச் சலுகைகாக ரூ.2ஆயிரம் கோடி செலவிடுகிறது குறிப்பிடத்தக்கது.
 

click me!