ஆக.26 நிறைவடைகிறது என்.வி.ரமணாவின் பதவிகாலம்… அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!!

By Narendran S  |  First Published Aug 10, 2022, 7:59 PM IST

உச்ச நீதிமன்றத்தின் 49 ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். 


உச்ச நீதிமன்றத்தின் 49 ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 48 ஆவது தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதை அடுத்து பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது வழக்கம்.

இதையும் படிங்க: நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் டெல்லி போலீசாருக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Tap to resize

Latest Videos

அந்த வகையில் அடுத்த தலைமை நீதிபதி தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு என்.வி.ரமணா எழுதியிருந்த கடித்தத்தில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் என்.வி.ரமணாவின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்பதாக அறிவித்துள்ளது. அதன்படி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு யு.யு.லலித்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: ஹரியாணா பானிபட்டில் ரூ.900 கோடி 2ஜி எத்தனால் ஆலை: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இதன் மூலம் வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின் தலைமை நீதிபதியாகவும் பதவி பெறும் இரண்டாவது நபராக யு.யு.லலித் திகழ்கிறார். இவர் தான் காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று சக நீதிபதிகளை நோக்கி கேள்வி எழுப்பியவர். மேலும் இவர் பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!