நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் டெல்லி போலீசாருக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

By Dhanalakshmi GFirst Published Aug 10, 2022, 6:28 PM IST
Highlights

நுபுர் சர்மாவின் அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசாருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக வழக்குகள் இருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், அனைத்து வழக்குகளையும் ஒரீடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற நுபுர் சர்மாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து அவர் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். வளைகுடா நாடுகளில் இருந்தும் இவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. 

இதைத் தொடர்ந்து நாட்டிலும் பல்வேறு மாநிலங்களில் இவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் பல்வேறு மாநிலங்களுக்கு தன்னால் போகாது முடியாது என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். எனவே, அனைத்து வழக்குகளையும் ஓரீடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

இன்று இவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நுபுர் சர்மா மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. நுபுர் சர்மாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த உத்தரவு பிரப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.   

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அளித்து இருந்த உத்தரவில், நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைக்கு தனிப்பட்ட முறையில் நுபுர் சர்மாதான் காரணம் என்று கூறி இருந்தனர். 

நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை... உச்சநீதிமன்றம் அதிரடி!!

இந்த நிலையில், இன்று நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் தொகுக்கப்பட்டு, டெல்லி போலீசாரிடம் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி போலீஸ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் வருகிறது. நபிகள் நாயகம் மீதான கருத்திற்காக நுபுர் சர்மாவை கைது செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 19ஆம் தேதி தெரிவித்து இருந்தது. அதேசமயம் நுபுர் சர்மாவின் கழுத்தை அறுத்து கொள்ளப்போவதாக பல்வேறு இடங்களில் இருந்து மிரட்டல்கள் எழுந்தன. ராஜஸ்தான் மாநிலத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்த டெய்லர் ஒருவர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. 

டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்குவங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் அசாம் ஆகிய மாநிலங்களில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

pm narendra modi: ஹரியாணா பானிபட்டில் ரூ.900 கோடி 2ஜி எத்தனால் ஆலை: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

click me!