ஹரியாணாவில் கடந்த 5 ஆண்டுகளில் 900க்கும் அதிகமானோர் பலி: எப்படி நடந்தது தெரியுமா?

Published : Aug 10, 2022, 05:12 PM IST
 ஹரியாணாவில் கடந்த 5 ஆண்டுகளில் 900க்கும் அதிகமானோர் பலி: எப்படி நடந்தது தெரியுமா?

சுருக்கம்

ஹரியாணாவில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அலையவிட்டதில் விபத்தில் சிக்கி 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹரியாணாவில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அலையவிட்டதில் விபத்தில் சிக்கி 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தொடர் நடந்து வருகிறது. சுயேட்சை எம்எல்ஏ பல்ராஜ் எழுப்பிய கேள்விக்கு,  வேளாண் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் ஜேபி தலால் பதில் அளித்தார். 

சூப்பரூ! அம்மாவும் பையனுமா! ஒரே நேரத்தில் தேர்வு எழுதி அரசுப் பணிக்குத் தேர்ச்சி

அவர் பேசுகையில் “ மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,383 சாலை  விபத்துகள் நடந்துள்ளன. இதில் 3,017 விபத்துகளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.  3,107 பேர் காயமடைந்தனர். சாலைகளில் கால்நடைகளை அலைவிட்டதால், அதின் மீது மோதி விபத்து ஏற்பட்டுதான் பெரும்பாலனவர்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்துக்களைக் குறைக்க , ஒருலட்சம் கால்நடைகளை, பல்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். பசுக்களை பராமரிக்கும் கூடங்களுக்குஅரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

குட்நியூஸ்.. தமிழகத்திற்கு ரூ.4,758 கோடி நிதியை விடுவித்த மத்திய அரசு.. உ.பி.யில் அதிகபட்சம்..!

கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.17.75 கோடி, 2021-22ல் ரூ.29.50 கோடி, 2022-23ம் ஆண்டில் ரூ.13.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை ஹரியானா பசு சேவா ஆயோக் மூலம் 569 பசுகாப்பகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரத்யேக மருந்துகளையும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது
இவ்வாறு தலால் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இனி பெரிய ராக்கெட்டுகளை ஈஸியா ஏவலாம்.. ஸ்ரீஹரிகோட்டாவில் ரெடியாகும் இஸ்ரோவின் 3வது ஏவுதளம்!
வரலாறு படைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு! இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் பயணம்!