கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும், மகனும், ஒரே நேரத்தில் தேர்வு எழுதி அரசுப்பணிக்குத் தேர்வாகியுள்ளனர்.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும், மகனும், ஒரே நேரத்தில் தேர்வு எழுதி அரசுப்பணிக்குத் தேர்வாகியுள்ளனர்.
42 வயது தாயும், 24 வயது மகனும் ஒரே நேரத்தில் தற்போது அரசுப் பணி பெற்று அலுவலகத்தில் பணியாற்ற உள்ளனர் என்று ஏஎன்ஐ செய்திகள் தெரிவிக்கின்றன
இலங்கை-யை விட்டு வெளியேற மகிந்தா ராஜபக்ச-வுக்கு தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிந்து(வயது42) இவரின் மகன் விவேக்(24). இருவரும்தான் ஒரே நேரத்தில் அரசுப்பணிக்குத் தேர்வாகியுள்ளனர்.
கேரள அரசுப்பணியில் பிந்து எல்டிசி கிளார்க் பணியில் 38-வது ரேங்க் பெற்றுள்ளார். அவரின் மகன்விவேக் எல்ஜிஎஸ் தேர்வில் 92வது ரேங்க் பெற்றுள்ளார். பிந்து இருமுறை எல்ஜிஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை, ஒருமுறை எல்டிசி தேர்வு எழுதியும் கிடைக்கவில்லை, 4-வது முறையாக எல்டிசி தேர்வு எழுதி பிந்து வேலை பெற்றுள்ளார்.
2024-மக்களவைத் தேர்தலில் ஜெயிக்கமுடியுமா? பிரதமர் மோடிக்கு சவால் விட்ட நிதிஷ் குமார்
தனது தாயுடன் சேர்ந்து தேர்வு எழுதி வேலை கிடைத்தது குறித்து விவேக் கூறுகையில் “ நானும் என் அம்மாவும் சேர்ந்துதான் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோம். என்னை தேர்வு எழுதவைத்தவர் என் தாய், என் தந்தை அனைத்து உதவிகளையும் செய்தார்.
என் ஆசிரியர்கள் அரசுப்பணி எழுத அதிகமான ஊக்கம்அளித்தனர். இருவரும் ஒன்றாகத்தான் படித்தோம் ஆனால், ஒரே மாதிரி தேர்வாகுவோம் என நினைக்கவில்லை. இருவருமே கூடுதலாக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
பிந்து கூறுகையில் “ என்னுடைய மகன் 10ம்வகுப்பு படிக்கும் போதே அவருடைய புத்தகத்தை படிக்கும் ஆர்வம் வந்தது. இதனால் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு கேரளா அரசுத் தேர்வுக்கு தயாராகினேன். 9 ஆண்டுகளில், இருவரும் அரசுப் பணி பெற்றுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக நான் அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். என்னுடைய மகன், பயிற்சி வகுப்பு எடுத்த ஆசிரியர்கள்தான் எனக்கு ஊக்கம் அளித்து என்னை தேர்ச்சி பெற வைத்தனர்.
நிதிஷ் குமாருக்கு துரோகம் செய்வது கைவந்த கலை: பாஜக விளாசல்; மாநிலம் முழுவதும் இன்று போராட்டம்
அரசு தேர்வு எழுதுபவர் என்னவாக இருக்கவேண்டும், இருக்கக்கூடாது என்பதற்கு நான்தான் சரியான உதாரணம். நான் தொடர்ந்து படிக்கவில்லை. தேர்வுக்கு 6மாதங்களுக்கு முன்புதான் படித்தேன். அதன்பின் சிறிய இடைவெளிவிட்டு, 3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தேர்வு எழுதினேன். இடைவெளிவிட்டு எழுதியதுதான் தொடரந்து தேர்வில் தோல்வி அடையக் காரணம். ஆனால், விடாமுயற்சி எவ்வாறு கடைசியில் பலன் அளிக்கிறது என்னுடைய முயற்சிதான் சாட்சி” எனத் தெரிவித்தார்