2014ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் வென்றவர்கள் 2024ம் ஆண்டு தேர்தலிலும் வெல்ல முடியுமா என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
2014ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் வென்றவர்கள் 2024ம் ஆண்டு தேர்தலிலும் வெல்ல முடியுமா என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி
பீகாரில் பாஜகவுடன் சேர்ந்து 2 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி நடத்திவந்தது. ஆனால், பாஜக தலைமைக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையிலான மனக்கசப்பால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார், ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமாவை வழங்கினார்.
நிதிஷ் குமார் ‘ஈயம் பூசப்பட்ட’ ஆளுமை: பிரசாந்த் கிஷோர் கிண்டல்
அடுத்ததாக ராஷ்டரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உள்ளார். இன்று பிற்பகல் நடந்த பதவி ஏற்பு விழாவில் புதிய முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றனர்.
பாஜக வலையில் ஆர்சிபி சிங்; மோப்பம் பிடித்து கட்சியை காப்பற்றிய பழுத்த அரசியல்வாதி நிதிஷ் குமார்!!
இந்நிலையில் பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ 2014ம்ஆண்டு மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள், 2024ம் ஆண்டு தேர்தலிலும் வெல்ல முடியுமா.2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலி்ல அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க விரும்புகிறேன். எந்தப் பதவிக்கும் நான் முன்மொழியவில்லை, அதற்கான நபர் இல்லை” எனத் தெரிவித்தார்