ரேஷனில் பொருட்கள் வாங்கும் ஏழைகள் கட்டாயமாக தேசியக் கொடியை வாங்க வேண்டும் இல்லாவிட்டால் ரேஷன் பொருட்கள்அளவு குறைக்கப்படும் என்ற சம்பவத்துக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
ரேஷனில் பொருட்கள் வாங்கும் ஏழைகள் கட்டாயமாக தேசியக் கொடியை வாங்க வேண்டும் இல்லாவிட்டால் ரேஷன் பொருட்கள்அளவு குறைக்கப்படும் என்ற சம்பவத்துக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
வரும் 15ம் தேதி இந்த தேசம் 75-வது சுதந்திரத்தினத்தைக் கொண்டாட இருக்கிறது. தேசம் முழுவதும் 75வது சுதந்திரதினத்தைச் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் புதிய ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி
வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பில் லட்சக்கணக்கான கொடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையி்ல் ரேஷன் கடையி்ல் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் ரூ.20 செலுத்தி கட்டாயமாக தேசியக் கொடியை வாங்க வேண்டும் இல்லாவிட்டால், ரேஷன் பொருட்கள் அளவு குறைக்கப்படும் என்று மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பி. வருண் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் உடன் உறவு முறிவு: பாஜவுக்கு பின்னடைவா? NDAவிலிருந்து 3வது பெரிய கட்சியும் விலகல்
ரேஷனில் பொருட்கள் வாங்கவருவோரிடம் கட்டாயமாக 20 ரூபாய் பெற்றுக்கொண்டு தேசியக் கொடியை விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயல் குறித்து பலரும் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பேசும்வீடியோவை வருண் காந்தி பகிர்ந்துள்ளார்.
What kind of patriotism is this? 😥 https://t.co/4RsGFMVCId
— Satish Acharya (@satishacharya)வருண் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ வெட்கமாக இருக்கிறது, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தில் இருக்கும் தேசியக் கொடிக்கான விலையை, ஏழைகளின் உணவைப் பறித்துத்தான் வாங்க வேண்டுமா?
ஏழைகள் மீது சுமை ஏற்றி நாட்டின் 75-வது சுதந்திரத்தினத்தைக் கொண்டாடினால் அது துரதிர்ஷ்டம். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பொருட்கள் வாங்க வரும்போது தேசியக் கொடி வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இல்லாவிட்டால், ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் அளவு குறைக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.