மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை மன்னிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By SG Balan  |  First Published Jul 31, 2023, 6:34 PM IST

சந்தேகத்திற்கு இடமின்றி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.


நாட்டின் பிற பகுதிகளிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதைக் காரணம் காட்டி, மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை மன்னிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

"இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் பிற பகுதிகளிலும் பல பெண்களுக்கு நடக்கின்றன என்பதற்காக மணிப்பூரில் இப்போது நடப்பதை மன்னிக்க முடியாது" என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள பெண்களும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, இன்னும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள் என்ற கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே விவசாயி! இவர் ரயில் வாங்கியது எப்படி தெரியுமா?

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பன்சூரி ஸ்வராஜ், மணிப்பூர் பெண்களுக்கு நீதி வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு வழிமுறையும் பிற மாநிலங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நீதி அளிக்கும் வகையில் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். சிபிஐ விசாரணையோ, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் கூடிய விசாரணையோ அது பாஜக அல்லாத இந்த மாநிலங்களிலும் நடைபெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மனுதாரரின் வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "சந்தேகத்திற்கு இடமின்றி, நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. அது நமது சமூக யதார்த்தத்தின் ஒரு பகுதி. எவ்வாறாயினும், மணிப்பூரில் இதற்கு முன் இல்லாத அளவு மோசமான குற்றங்கள் நடத்திருக்கின்றன. வகுப்புவாத மற்றும் மதவாத கலவரத்தின் சூழ்நிலையில் வன்முறை நிகழ்ந்துள்ளது” என்று எடுத்துரைத்தார்.

பத்ரி சேஷாத்ரியை உடனே விடுதலை செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கடிதம்

மேற்கு வங்கத்திலும் பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளர் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டார் என ஸ்வராஜ் வலியுறுத்தினார். அப்போது, மேற்கு வங்கத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்பதை யாரும் மறுக்கவில்லை என்ற தலைமை நீதிபதி,  “இந்தியாவின் அனைத்து மகள்களுக்கும் ஏதாவது செய்யுங்கள் அல்லது யாருக்கும் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

2 வருஷமா சம்பளம் வாங்காமல் உழைக்கும் அம்பானி! ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருக்கு வந்த சோதனை!

click me!