Teachers to Lose Job : வெற்று OMR தாள்களை சமர்ப்பித்து, சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்கள் வேலையை இழக்கும் நிலை இப்பொது ஏற்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி அரசுக்கு பெரும் பின்னடைவாக, அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கான 2016ம் ஆண்டு ஆட்சேர்ப்பு செயல்முறையை கல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் அதன் மூலம் பணியமர்த்தப்பட்ட 25,753 பேர் வேலை இழக்க நேரிடும் என்றும், பணியில் சேர்ந்ததில் இருந்து பெற்ற சம்பளத்தை 12% வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்று கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், வெற்று OMR தாள்களை சமர்ப்பித்து, சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நான்கு வாரங்களுக்குள் அவர்களின் சம்பளத்தை திருப்பித் தர வேண்டும் என்று நீதிபதிகள் டெபாங்சு பாசக் மற்றும் எம்.டி ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட பெஞ்ச், நியமன செயல்முறையை மேலும் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்திடம் (WBSSC) புதிய நியமன செயல்முறையைத் தொடங்குமாறும் நீதிபதிகளின் அமர்வு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்டுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆசிரியர் பணி நியமன வழக்கில் முன்னாள் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் சிறையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"2016ல் இருந்து சுமார் 24,000 SSC ஆட்சேர்ப்புகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது, மேலும் இது சம்மந்தமாக CBI யாரையும் காவலில் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. உண்மையில் நீதிபதிகளின் இந்த நடவடிக்கையால் தகுதியானவர்களின் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியுள்ளது. இந்த முறை நிச்சயம் மம்தா தோற்கடிக்கப்படுவார் என்று அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு, 24,640 காலிப் பணியிடங்களுக்கு 23 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலான தேர்வுத்களில் தோன்றியிருந்த நிலையில், 25,753 பணியிடங்களுக்கு எதிராக பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக மனுதாரர்கள் சிலரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதில் 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் பணியிடங்கள் அடங்கும்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!