மீண்டும் இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.. திமுக எடுத்த வியூகம் கைகொடுக்குமா.?

By Raghupati R  |  First Published Mar 13, 2023, 9:23 AM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனிடையே, 35 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Latest Videos

இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்

இந்நிலையில், அதானி குழுமம்மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, பணவீக்கம் உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேநேரம், பிரிட்டன் சென்றிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது குறித்து பிரச்சினை எழுப்ப ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விற்கு முன்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தங்கர், சபையின் சுமூகமான செயல்பாடு உறுதி செய்வதற்காக டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை மரணங்களைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக தாக்கல் செய்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது.

இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்

click me!