காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கிரண் குமார் ரெட்டி... பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்!!

Published : Mar 12, 2023, 10:52 PM IST
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கிரண் குமார் ரெட்டி... பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்!!

சுருக்கம்

ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், அக்காட்சியின் மாநிலத் தலைவராகவும் இருக்கும் கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் பாஜகவில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இன்று ராஜினாமா செய்து இருக்கிறார். இவருக்கு பாஜகவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா? அல்லது ஆந்திராவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி

பிரிக்கப்படாத ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்தவர் கிரண் ரெட்டி. 2010, நவம்பர்11 ஆம் தேதி, முதல்வராக பதவியேற்றவர், ஆந்திராவை பிரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்ததை எதிர்த்து  2014, மார்ச் 10ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திராவை இரண்டாக பிரிக்க காங்கிரஸ் முடிவு எடுத்ததைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஜெய் சமைகியாந்த்ரா சமிதி என்ற கட்சியை மார்ச் 12, 2014ல் துவக்கி இருந்தார். 

இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணியால் 42,000 வாக்குகள் போச்சு... ஈரோடு இடைத்தேர்தல் குறித்து செங்கோட்டையன் பரபரப்பு கருத்து!!

இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்தால், சிறிது காலம் அமைதியாக இருந்தார். பின்னர் மீண்டும் 2018, ஜூலை 13ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னரும் பெரிய அளவில் செயல்படாமல் இருந்தார். தற்போது, மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, பாஜகவில் சேருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!