பாஜக அரசு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார். இது புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ .இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடிய முதல் கூட்டத்தொடரின் முடிவில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. (நாரி சக்தி வந்தான் அதினியம்). அதன்பின்னர் பெண்களின், திறமை, வீரம், சாகசம் ஆகியவற்றை குடியரசு தின விழாவில் பார்த்தோம். இன்று பட்ஜெட் கூட்டத்டொடர் தொங்கும் போது ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். நாளை நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு திருவிழா போல் உள்ளது.” என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். விவாதங்கல் தீவிரமானதாக இருக்கலாம். ஆனால் இடையூறு செய்வதாக இருக்கக்கூடாது.
பாராளுமன்றத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்கியவ எம்.பி.க்கள் அனைவராலும் நினைவுகூரப்படுவார்கள். ஆனால் இடையூறுகளை ஏற்படுத்திய அந்த உறுப்பினர்கள் நினைவில் கொள்ளப்பட மாட்டார்கள். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தவறவிடாமல், தங்களால் இயன்றதைச் செய்யுமாறு அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஓய்வூதிய விதிகளில் திருத்தம்! பெண் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்பு!
நாடு ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களைக் கடந்து முன்னேறி வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி நடைபெறுகிறது. மக்களின் ஆசியுடன் இந்தப் பயணம் தொடரும். பாஜக அரசு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி, வேலைவாய்ப்பு, எரிபொருள் விலை போன்றவை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.