New Flight Routes for Ayodhya : அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 8 புதிய விமான வழித்தடங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அயோத்தியில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி அவர்களுடைய தலைமையில் இந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு ராமரை தரிசித்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் அயோத்திக்கு வந்து ராமரை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் பயணிகளுக்கு வசதியாக அயோத்தி விமான நிலையத்தை அடைய நாளை மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி முதல் 8 புதிய விமான வழி தடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை எடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பிப்ரவரி 1ம் தேதி முதல் அயோத்திக்கு எட்டு புதிய விமான வழித்தடங்கள் துவங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் நக்சல் என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம்; 14 வீரர்களுக்கு காயம்
விமானப் பட்டியல் பின்வருமாறு
புது டெல்லியில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் விமானம், அயோத்திக்கு 12 மணிக்கு சென்று சேரும். அதேபோல அயோத்தியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் விமானம், புதுடெல்லிக்கு காலை 10 மணி அளவில் வந்து சேரும். புதன்கிழமைகளை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இயக்கப்படும்.
அதேபோல சென்னையில் இருந்து மதியம் 12:40 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 3.15 மணியளவில் அயோத்தி சென்றடையும். அதேபோல அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:20 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த விமான சேவை வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
அகமதாபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம், அயோத்திக்கு காலை 8 மணிக்கு சென்றடையும். அதேபோல அயோத்தியில் மதியம் 12:30 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2:25 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். புதன்கிழமைகளை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த விமானம் ஆனது இயக்கப்படும்.
பெங்களூரில் இருந்து காலை 10 50 மணிக்கு புறப்படும் விமானம் அயோத்திக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடையும் அதேபோல அயோத்தியில் மதியம் 2.10 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூருக்கு மாலை 4.45 மணிக்கு வந்து சேரும். இது மாதத்தின் 1,3,5 மற்றும் 7ம் தேதி இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் இருந்து காலை 8:20க்கு புறப்படும் விமானம், அயோத்திக்கு காலை 10 40க்கு சென்று சேரும், அதேபோல அயோத்தியில் காலை 11:15க்கு புறப்படும் விமானம் மும்பைக்கு மதியம் 1:20 நிமிடங்களுக்கு சென்றடையும். இதுவும் மாதத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதிய விதிகளில் திருத்தம்! பெண் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்பு!