மூளைச்சாவுக்குப் பின் உடலுறுப்பு தானம் மூலம் 3 நகரங்களில் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!

By SG Balan  |  First Published May 29, 2023, 5:21 PM IST

மூளைச்சாவு அடைந்த இளைஞர் தனது உடலுறுப்புகளை தானம் செய்ததால் 3 நகரங்களில் 4 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.


பம்போலிமில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 19 வயது இளைஞர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதனால், மூன்று நகரங்களில் உள்ள நான்கு நபர்களுக்கு புதிய வாழ்வை கிடைத்துள்ளது.

அவரது சிறுநீரகங்கள் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. சிறுவனின் இதயம் மற்றும் கல்லீரலை மும்பை மற்றும் அகமதாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. கோவா காவல்துறை கோவா சர்வதேச விமான நிலையத்தில் அதற்கான சிறப்பு வழித்தடத்தை விரைவாக உருவாக்கிக் கொடுத்தது.

Tap to resize

Latest Videos

கர்நாடக அமைச்சரவை இலாகாக்கள் வெளியீடு: சித்தராமையாவுக்கு நிதி; சிவகுமாருக்கு 2 இலாகா!

சிறுவனின் சிறுநீரகங்கள் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலின்படி உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன என பந்தேகர் கூறுகிறார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து ஜிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் பந்தேகர் தெரிவிக்கிறார்.

இது குறித்து உடல் உறுப்பு தானத்திற்கான மாநில அரசு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.எம். பந்தேகர் கூறுகையில், "உறுப்புகள் வெற்றிகரமாக மாற்றப்பட்டுவிட்டன. சிறுவனின் இதயம் மும்பையில் உள்ள ஹெச். என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் 51 வயது பெண்ணுக்கும், கல்லீரல் அகமதாபாத்தில் உள்ள சி.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் 47 வயது ஆணுக்கும் பொருத்தப்பட்டுள்ளன" என்றார்.

Delhi Girl Murder: டெல்லியில் சிறுமியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்! வெறித்தனமான தாக்குதலை வேடிக்கை பார்த்த மக்கள்!

"சிறந்த மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகும், அவரது உடல்நிலை மோசமடைந்து, மூளைச்சாவு அடைந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் மனமுவந்து மகனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்தனர். மூளைச்சாவு அடைந்த ஒருவர் உறுப்பு தானம் மூலம் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும். திசு தானம் மூலம் 75 பேருக்கு உதவ முடியும்" என பாண்டேகர் விளக்குகிறார்.

"தற்போது, கோவாவில் இன்னும் 44 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான ஒரே நம்பிக்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மட்டும்தான். அவர்கள் அனைவருமே உறுப்பு தானம் செய்ய முன்வருவோருக்காகக் காத்திருக்கிறார்கள். மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து உறுப்பு தானம் செய்யவேண்டும்" எனவும் அவர் சொல்கிறார்.

Manipur violence: மணிப்பூர் வன்முறையில் போலீஸ் உள்பட மேலும் 5 பேர் சாவு! ஆய்வுக்குச் செல்லும் அமித் ஷா!

click me!