Manipur violence: மணிப்பூர் வன்முறையில் போலீஸ் உள்பட மேலும் 5 பேர் சாவு! ஆய்வுக்குச் செல்லும் அமித் ஷா!

Published : May 29, 2023, 03:40 PM ISTUpdated : May 29, 2023, 03:45 PM IST
Manipur violence: மணிப்பூர் வன்முறையில் போலீஸ் உள்பட மேலும் 5 பேர் சாவு! ஆய்வுக்குச் செல்லும் அமித் ஷா!

சுருக்கம்

மணிப்பூர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கு முன் நடைபெற்ற புதிய வன்முறைச் சம்பவங்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினர் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி 40 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்ற, நிலையில், இன்று ஒரு போலீஸ் உட்பட மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி என்ற பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பழங்குடிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இதனால், மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மே 3ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் மோதல்களில் கிட்டத்தட்ட 70 பேர் வரை பலியாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை முடங்கியுள்ளது.

மும்பையில் கடல் இணைப்பு பாலத்துக்கு சாவர்க்கர் பெயர்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பைரன் சிங், "பயங்கரவாதிகள் தாக்குதலின்போது M-16, AK-47, ஸ்னைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். பல கிராமங்களில் வீடுகளுக்கு தீ வைத்து எரிக்க முயன்றனர். ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். அதில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன" என்று கூறினார்.

இச்சூழலில் மணிப்பூர் மாநில நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மணிப்பூர் சென்றிருக்கிறார். அவர் செல்வதற்கு முன் மணிப்பூரில் புதிதாக வன்முறை வெடித்து, ஒரு காவலர் உட்பட குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் செரோ, சுகுனு பகுதிகளில் பல வீடுகளுக்கு தீ வைத்து சூறையாடியுள்ளனர். மாநிலத்தில் அமைதியைப் பேணுமாறும், இயல்பு நிலையை திரும்ப உழைக்குமாறும் மெய்தி மற்றும் குக்கிகள் சமூகத்தினருக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயும் நேற்று மணிப்பூருக்குச் சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்துவருகிறார்.

UPI பரிவர்த்தனையில் 95,000 மோசடிகள்! பணத்தை இழக்காமல் தப்பிக்க 10 ஆலோசனைகள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!