Veg Biryani : வெஜ் பிரியாணியில் எலும்பு.. ஆர்டர் செய்த வாடிக்கையாளர் அதிர்ச்சி - கடைசியில் காத்திருந்த சம்பவம்

Published : Dec 28, 2022, 09:23 PM IST
Veg Biryani : வெஜ் பிரியாணியில் எலும்பு.. ஆர்டர் செய்த வாடிக்கையாளர் அதிர்ச்சி - கடைசியில் காத்திருந்த சம்பவம்

சுருக்கம்

வெஜ் பிரியாணி கேட்ட வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் எலும்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள உணவகத்திலற்கு சென்ற ஒருவர் வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அடுத்து தான் அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. அது என்னவென்றால், அவர் கேட்ட வெஜ் பிரியாணியில் எலும்பு இருந்தது. இதனை கண்ட அவர் உடனே கடை உரிமையாளரிடம் புகார் தெரிவிக்க பெரும் பிரச்சினை ஆனது.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, உணவகத்தில்  வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட வெஜ் பிரியாணியில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள உணவக உரிமையாளர் சைவ உணவு உண்பவருக்கு, அசைவ உணவை வழங்கியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி பேசிய டி.சி.பி சம்பத் உபாத்யாய், இந்தூரில் உள்ள ஷாலிமார் ஸ்வயம் டவுன்ஷிப்பில் வசிக்கும் ஆகாஷ் துபே என்ற நபர், வெஜ் பிரியாணி சாப்பிட விஜய் நகர் பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றதாக புகார் அளித்துள்ளார். துபே தனது புகாரில், அவர் வெஜ் பிரியாணியை மட்டுமே ஆர்டர் செய்ததாகவும், ஆனால் ஊழியர்களால் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதாகவும் கூறினார்.

உணவை உண்டபோது அதில் எலும்புகள் இருப்பதைக் கண்டார். இந்த சம்பவம் குறித்து உணவக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் துபே புகார் செய்தார். பின்னர் அவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். இருப்பினும், துபே விஜய் நகர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தார் என்றும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். வெஜ் பிரியாணியில் எலும்பு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.. AIADMK : திமுக போல அதிமுக ஒன்றும் ராஜபரம்பரை கிடையாது.. வாரிசு அரசியலை அட்டாக் செய்த சி.வி சண்முகம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!