ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு: மத்தியக் கல்வி அமைச்சகம்!

Published : Aug 23, 2023, 10:08 PM IST
ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு: மத்தியக் கல்வி அமைச்சகம்!

சுருக்கம்

புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரியவந்துள்ளது

மத்திய கல்வி அமைச்சகத்தின் புதிய பாடத்திட்டத்தின்படி, மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெறும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு இனி பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு மொழிகள் கற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் (NEP) படி பாடத்திட்டம் தயாராக உள்ளதாகவும், 2024 கல்வியாண்டில் அதன் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு மொழிகளை படிக்க வேண்டும். அதில், ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என தேசிய பாடத்திட்டத்தின் இறுதி ஆவணம் கூறுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்வுகளை எளிதாக மாற்றும் வகையில்,மனப்பாடம் செய்வதை விட, மாணவர்களின் தனித்திறன்களை சோதிக்கும் வகையில் தேர்வுகள் மதிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகளில் உள்ள பதட்டங்களைத்  தணிக்கும் வகையில், மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு போதுமான நேரமும் வாய்ப்பும் இருப்பதை உறுதி செய்வதற்காக, வருடத்திற்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் தாங்கள் முடித்த பாடங்களை முடித்து பொதுத்தேர்வுக்கு வரும்போது, அதற்கு தயராக இருப்பதாக உணர்வார்கள். இதன் மூலம், நல்ல மதிப்பெண்களை எடுக்கவும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் சந்திரயான் திட்டம்: 3 நிலவுப் பயணங்களையும் வழிநடத்திய தமிழர்கள்!

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள பாடங்களின் தேர்வு கலை, அறிவியல் மற்றும் வணிகம் போன்றவற்றில் மட்டும் கட்டுப்படுத்தப்பட மாட்டது. பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை மாணவர்கள் பெறுவார்கள்.

பாடப்புத்தகங்களின் விலை உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், வகுப்பறையில் பாடப்புத்தகங்களை முடிக்கும் தற்போதைய நடைமுறை தவிர்க்கப்படும் என்றும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!