இன்டர்ஸ்டெலர் படத்துடன் ஒப்பிட்டு சந்திரயான்-3 பற்றி கமெண்ட் அடித்த எலான் மஸ்க்!

Published : Aug 23, 2023, 09:50 PM ISTUpdated : Aug 23, 2023, 10:01 PM IST
இன்டர்ஸ்டெலர் படத்துடன் ஒப்பிட்டு சந்திரயான்-3 பற்றி கமெண்ட் அடித்த எலான் மஸ்க்!

சுருக்கம்

சந்திரயான்-3 பட்ஜெட் மற்றும் இன்டர்ஸ்டெலர் படத்தின் பட்ஜெட் இரண்டையும் ஒப்பிட்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் செலவையும் இன்டர்ஸ்டெலர் ஹாலிவுட் படத்தையும் ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் சந்திரயான்-3 நிலவுப் பயணத்தின் செலவு ரூ. 615 கோடி ($75 மில்லியன்). இன்டர்ஸ்டெலர் ஹாலிவுட் திரைப்படத்தின் பட்ஜெட் $165 மில்லியன். புகழ்பெற்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க், இந்த இரண்டு பட்ஜெட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். சந்திரயான்-3 பட்ஜெட் இன்டர்ஸ்டெலர் படத்தின் பட்ஜெட்டை விடக் குறைவானது என்பது வியக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.

நிலவைத் தொட்ட சந்திரயான்-3! அடுத்து என்ன நடக்கும்? நிலவில் என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

இதே விஷயத்தை அறிந்து பல நாடுகளும் ஆச்சரியப்படும் நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஸ்க், "சந்திரயான்-3 பணத்துக்கான இந்தியாவின் பட்ஜெட் ($75M) இன்டர்ஸ்டெல்லர் (Interstellar) திரைப்படத்தின் பட்ஜெட்டை ($165M) விட குறைவாக உள்ளது என்பதை உணரும்போது ஆச்சரியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

பின், இந்த ட்வீட்டுக்கு அவரே செய்துள்ள ரிப்ளையில், "இது இந்தியாவுக்கு நல்லது" என்று கூறி இந்தியாவைப் பாராட்டியுள்ளார். இத்துடன் இந்திய மூவர்ணக் கொடியின் எமோஜியையும் இணைத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு இஸ்ரோ தலைவராக இருந்த கே. சிவன், சந்திரயான்-3க்கு பட்ஜெட் ரூ.615 கோடி என்று தெரிவித்தார். இதில் ரோவர்  (ஊர்தி கலன்) மற்றும் ப்ரொபல்ஷன் மாட்யூல் (உந்துவிசை கலன்) இரண்டுக்கும் ரூ.250 கோடி, ஏவுகணைக்கு ரூ.365 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 க்கு முன் இஸ்ரோ மேற்கொண்ட சந்திரயான்-2 திட்டத்திற்கு ரூ.978 கோடி செலவானது.

சந்திரயான்-3 வெற்றி... நான் உடனே கிளம்புறேன்... இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட நாடு திரும்பும் பிரதமர் மோடி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!