கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு….

 
Published : Dec 16, 2016, 11:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு….

சுருக்கம்

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு….

500 மற்றும்  1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்குப் பின் வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் குறித்த விவரங்களை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அது குறித்து வரும்  30-ம் தேதிக்குள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு அபராதம் உள்பட 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

. இந்நிலையில் பொதுமக்கள் தங்களிடமுள்ள கருப்பு பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க மார்ச் 31-ம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுளளது. வரும் மார்ச் மாதம் 31ம் தேதி  வரை தாமாக முன்வந்து கருப்பு பணத்தை மக்கள் கணக்கில் காட்டலாம் என்றும் தாமாக முன்வந்து கருப்பு பண விவரத்தை தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என்றும்  கணக்கில் காட்டப்படும் பணத்திற்கு 50 சதவித வரி மட்டுமே விதிக்கப்படும் என்றும்  அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இந்த நிலையில் கருப்பு பணத்தை சட்டவிரோதமாக வெள்ளையாக மாற்றுவதை தடுக்கும் விதமாக, கருப்புப் பணத்துக்கு கூடுதல் வரி விதிக்கும் வகையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரு  பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!