
டெல்லியில் தொடரும் பனிமூட்டம் : ரயில் போக்குவரத்து பாதிப்பு!
டெல்லியில் தொடரும் மூடுபனியால், ரயில் போக்குவரத்து இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் மூடுபனி நிலவுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. காலை நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாததால், முகப்பு விளக்கு எரியவிட்டபடியே வாகனங்கள் செல்கின்றன. போதிய வெளிச்சமின்மையால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக, டெல்லிக்கு வரவேண்டிய 42 ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.