பணம் முறையாக விநியோகம் செய்யாத வங்கி மீது பொதுமக்‍கள் தாக்‍குதல் : ஆர்.பி.ஐ. ஆளுநருக்‍கு கருப்புக்‍கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!

First Published Dec 16, 2016, 2:44 PM IST
Highlights


பணம் முறையாக விநியோகம் செய்யாத வங்கி மீது பொதுமக்‍கள் தாக்‍குதல்  : ஆர்.பி.ஐ. ஆளுநருக்‍கு கருப்புக்‍கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!

பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தால், நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், பணத்தை முறையாக விநியோகம் செய்யாத வங்கி மீது பொதுமக்‍கள் தாக்‍குதல் நடத்தினர். மேலும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்‍கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்‍ கொடிக்‍காட்டி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்‍கும் வகையில், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணம் பெறுவதற்கும், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதனால் பொதுமக்‍கள் பெரும் சிரமத்திற்கு ஆளான நிலையில், பணத்தட்டுப்பாடும் நிலவி வருவதால், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில், தேவையான பணம் கிடைக்‍காமல் கடும் அவதிக்‍கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம், ​Malda மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்‍ கிளையில் நேற்று பணம் பெறுவதற்காக பொதுமக்‍கள் நீண்டநேரம் காத்திருந்தனர். ஆனால், முறையாக பணம் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்‍கள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி பணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி, வங்கிக்‍ கிளை மற்றும் ஏ.டி.எம். மையத்தை அடித்து நொறுக்‍கினர். 

இதனிடையே, கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. Urjit Patel-க்‍கு எதிராக சிலர் திடீரென கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், அவரை தாக்‍கவும் முயற்சி செய்தனர். 

இதனை தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், Urjit Patel-ஐ பத்திரமாக மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு உடனடி நடவடிக்‍கை எடுக்‍காவிட்டால், நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்‍கும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

tags
click me!