BJP President Candidate 2022: திரவுபதி முர்மு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்

By Kevin KaarkiFirst Published Jun 21, 2022, 9:39 PM IST
Highlights

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு  அறிவிக்கப்பட்டு இருக்கிறார். 

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு  அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவின் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

குடியரசு தலைவருக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜூன் 29 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு: ஒரு தடவ தான் தவறும்... அன்று பறிபோன வாய்ப்பு இன்று தேடி வந்தது.. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு..!

பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் திரவுபதி முர்மு ரைராங்புர் என்.ஏ.சி. தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுனர் ஆவார். 

ஒடிசா மாநிலத்தின் சட்டப்பேரவையில் 2007 ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நிலகாந்தா விருது வெ ன்று இருக்கிறார். ஒடிசா அரசு அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் வணிகத் துறை, மீன்வளத் துறை மற்றும் விலங்கியல் என பல்வேறு துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். 
 

மேலும் செய்திகளுக்கு: பா.ஜ.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபது முர்மு... யார் தெரியுமா?

click me!