மறைந்து போன தந்தையை சிலையாக வடித்து வந்த அண்ணன்..! உருகி அழுத தங்கை.. உணர்ச்சி பிழம்பான திருமணமேடை

By Ajmal KhanFirst Published Jun 21, 2022, 2:52 PM IST
Highlights

சகோதரியின் திருமண நிகழ்வில் இறந்து போன தந்தையின் மெழுகு சிலையை கொண்டு வந்து மகிழ்சியில் ஆழ்த்திய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமண நிகழ்வில் இறந்த தந்தையின் சிலை

தந்தை மகளுக்கும் இடையேயான பாசம் அளவுக்கு அதிகமானது, தனது தாயை விட தந்தையை தான் பெண் குழந்தை நேசிக்கும், தனது முதல் ஹீரோ தந்தை தான் என கூறுவார்கள்,  இது போன்ற வார்த்தைகளை உண்மையாக்கும் வகையில் தந்தை மகள் பாசம் உண்மையில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் -ஜெயா தம்பதி இவர்களுக்கு ஹனிக்குமார் என்ற மகனும் சாய் என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் கடந்தாண்டு உயிரிழந்தார். சுப்பிரமணியனின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாக மனைவியும், மகளும் அழுது துடித்துள்ளனர்.தந்தை தன் மேல் வைத்த பாசத்தை தினந்தோறும் நினைவில் வைத்து ஏங்கியுள்ளனர். 

உருகி அழுத மணப்பெண்

இந்தநிலையில் சுப்பிரமணியன் மகள் சாய்க்கு மதன் என்பவரோடு திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் தனது திருமணத்தை பார்க்க தந்தை இல்லையே என மகள் வேதனைபட்டுள்ளார்.இந்த நிலையில் ஹைதராபாத்தில் கடந்த வாரம் சாய்க்கு, மதன் என்பவரோடு திருமணம் நடைபெற்றுள்ளது. படு விமர்சையாக நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

கொரோனாவில் இறந்த தந்தை, மகளின் திருமணத்தில் சிலையாக ஆஜர்.. உருகி அழுத உறவினர்கள்.. pic.twitter.com/HE8yG3bO4f

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

ஆனால் தந்தை இல்லையே என்ற குறை மட்டும் இருந்துள்ளது. அந்த நேரத்தில் தனது தங்கையை மகிழ்ச்சி அடைய செய்யும் வகையில், தனது தந்தை சுப்பிரமணியன் மெழுகு சிலையை  திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்து ஆச்சர்யம் படுத்தியுள்ளார் ஹனிகுமார், இதைப்பார்த்த மணப்பெண் சாய் அதிர்ச்சி அடைந்தார். ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஒரு சிறப்பு பந்தம் இருக்கும், தந்தையின் அன்பை யாராலும் நிரப்ப முடியாது அந்தவகையில் தனது திருமண நிகழ்வில் தந்தை இல்லையே என நினைத்த சாய்க்கு, சகோதரரின் பரிசு தங்கைக்கு மட்டுமில்லாமல் உறவினர்களையும் மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழக பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சிங்கப்பூர் போலீஸ்..? 3வது திருமணம் செய்ய முயற்சித்த நபர் மீது புகார்

click me!