Chidambaram:பாஜகவின் அகங்காரம்! மோர்பி பாலம் விபத்துக்கு இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை: ப.சிதம்பரம் விளாசல்

By Pothy RajFirst Published Nov 8, 2022, 2:52 PM IST
Highlights

குஜராத்தின் மோர்பி பாலம் விபத்துக்கு இதுவரை பாஜக வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை,அரசு தரப்பில் இருந்து யாரும் பதவிவிலகவில்லை. பாஜக அகங்காரத்தில் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விளாசியுள்ளார்.

குஜராத்தின் மோர்பி பாலம் விபத்துக்கு இதுவரை பாஜக வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை,அரசு தரப்பில் இருந்து யாரும் பதவிவிலகவில்லை. பாஜக அகங்காரத்தில் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விளாசியுள்ளார்.

மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்து பழமையான இரும்புக் கயிறு தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தின் பராமிரிப்பு பணியை சமீபத்தில் ஒரேவா என்ற நிறுவனம் செய்திருந்தது.

மது குடிங்க,சிகரெட் பிடிங்க,புகையிலை மெல்லுங்க! நீர் சேமிப்பு குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு

கடந்த மாதம் 30ம் தேதி இந்த பாலத்தில் மக்கள் சென்றபோது திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில் ஏராளமான மக்கள் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் 131 பேர் பலியானார்கள், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, அவர்களின் பெயர் முதல்தகவல் அறிக்கையில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இரும்பு பாலம் பராமரிப்பில் அனுபவம் இல்லாத நிறுவனத்திடம் ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது, இதில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பரில் 1 மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது, 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று அகமதாபாத் வந்திருந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

கியான்வாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கு:வாரணாசி நீதிமன்றம் ஒத்திவைப்பு

மோர்பி பால விபத்து என்பது நல்ல பெயருடன் இருக்கும் குஜராத்துக்கு பெரும் அவமானம். மோர்பி பாலம் விபத்தில் 130க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று வெளிநாடுகளில் விபத்து நடந்திருந்தால், உடனடியாக அதற்கு பொறுப்பானவர்கள் பதவியிலிருந்து விலகியிருப்பார்கள். 

இதில் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், விபத்துக்கு பொறுப்பேற்று பாஜக தரப்பில் , அரசு தரப்பில் இதுவரை யாரும் மன்னிப்புக் கோரவில்லை, யாரும் வருத்தம் தெரிவித்து பதவி விலகவில்லை. 
குஜராத் அரசு என்ன நினைக்கிறது என்றால், வரும் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம், ஆதலால், மோர்பி விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று எண்ணுகிறது. 

குஜராத் மாநிலம் மாநில அரசால், முதல்வர் பூபேந்திர படேலால் நிர்வாகம் செய்யப்படவில்லை, டெல்லியால் நிர்வகிக்கப்படுகிறது. 

பாஜகவின் கைப்பாவைகளாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன. சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்படுவதில் 95 சதவீதம் எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். 

இமாச்சல் தேர்தலுக்கு முன்பாக கூட்டமாக பாஜகவில் சேர்ந்த 26 காங்கிரஸ் நிர்வாகிகள்

பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இமாச்சலப் பிரதேச தேர்தலில் பாஜக தெரிவித்துள்ளது. பொது சிவில் சிட்டத்தை மாநில அரசால் அமல்படுத்த முடியாது, சிறு குழந்தைக்குக் கூடதெரியும். இதை நாடாளுமன்றம் மட்டும் செயல்படுத்த முடியும். நாடாளுமன்றம் செயல்படுத்தாமல் எந்த மாநிலமும் பொது சிவில் சிட்டம் தொடர்பாக, அமல்படுத்துவது தொடர்பாக குழுவை உருவாக்க முடியாது. 

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்

click me!