Gyanvapi Masjid Case:கியான்வாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கு:வாரணாசி நீதிமன்றம் ஒத்திவைப்பு

By Pothy RajFirst Published Nov 8, 2022, 1:09 PM IST
Highlights

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியி்ல் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மீதான தீர்ப்பை வரும் 14ம் தேதிக்கு விரைவு நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்தது.

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியி்ல் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மீதான தீர்ப்பை வரும் 14ம் தேதிக்கு விரைவு நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி விரைவு நீதிமன்றத்தின் அமர்வில் இல்லை என்பதால் வரும் 14ம் தேதிக்கு வழக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

‘இந்து’ என்ற வார்த்தைக்கு அசிங்கமான அர்த்தம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை

கியான்வாபி மசூதி வழக்கில் 3 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுதாரர்கள் வழக்குத் தொடர்ந்தன. முதலில் மசூதியில் உள்ள சுயம்பு ஜோதிர்லிங்க பகவான் விக்னேஷ்வரை உடனடியாக வழிபாடு செய்ய அனுமதி, கியான்வாபி மசூதி வளாகத்தை ஒட்டுமொத்தமாக இந்துக்களிடம் ஒப்படைப்பது, கியான்வாபி மசூதி வளாகத்துக்குள் முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்தலாகும். இந்த 3 கோரிக்களை மீது வரும் 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்.

ஆனால், தற்போது முஸ்லிம்கள் கியான்வாபி மசூதிக்கள் சென்று தொழுகை நடத்தி வருகிறார்கள். 
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

பணமதிப்பிழப்பு! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?

இதை விசாரித்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  ஒரு குழுவை நியமித்தது. அந்த குழுவினர் மசூதியை ஆய்வுசெய்து வீடியோ எடுத்தனர், அப்போது, மசூதியில் ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சிவலிங்கம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கைவிடுத்தன. இதற்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. ஆனாலும் கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வுநடத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் மீண்டும் வலியுறுத்தின.

ஆனால், இது சிவலிங்கம் அல்ல, நீரூற்று என்று முஸ்லிம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கார்பன் டேட்டி ஆய்வு முறை நடத்த வேண்டும் எனக் கோரி இந்து அமைப்புகள் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாரணாசி நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. 

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜூன்ஸ், டி-சர்ட், லெகின்ஸ் அணிய தடை..!

கார்பன் டேட்டிங் ஆய்வு நடத்தும்போது சிவலிங்கத்துக்கு சேதம் ஏதும் ஏற்பட்டால், இந்து மக்களின் உணர்வுகள் பாதிக்கப்படும். ஆதலால், அனுமதிதர முடியாது என்று வாரணாசி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட வாரணாசி விரைவு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


 

click me!