Latest Videos

டி.கே. சிவகுமாருக்கு பிறந்தநாள்... பரிசாக முதல்வர் பதவியை வழங்குமா காங்கிரஸ்?

By SG BalanFirst Published May 15, 2023, 10:29 AM IST
Highlights

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக முதல்வர் பதவிக்காக மூத்த தலைவர்களான டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா இடையே வலுவான போட்டி காணப்படுகிறது.

கர்நாடக முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யாத நிலையில், இரண்டு முக்கிய போட்டியாளர்களான டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) டெல்லி சென்று கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.

இரண்டு தலைவர்களையும் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தனிப்பட்ட முறையில் சந்திக்க கட்சி மேலிடம் விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, டி.கே. சிவகுமாருக்கு அவரது பிறந்தநாள் பரிசாக கர்நாடக முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டி.கே. சிவகுமார் தனது பிறந்தநாளை கட்சியின் மூத்த தலைவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறார். "எனது வாழ்க்கை கர்நாடக மக்களுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டது. எனது பிறந்தநாளை முன்னிட்டு, கர்நாடக மக்கள் எனக்கு சிறந்த பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளனர். அன்பான வாழ்த்துக்களுக்கு எனது காங்கிரஸ் குடும்பத்தினருக்கு நன்றி" என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்

My life is dedicated to serving the people of Karnataka.

On the eve of my birthday, the people of Karnataka gave me the best birthday gift possible.

Thanks to my Congress family for their warm greetings. pic.twitter.com/j6RP30vX8k

— DK Shivakumar (@DKShivakumar)

ரகசிய வாக்கெடுப்பு?

பெங்களூரு ஷங்ரிலா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் ரகசிய வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான லட்சுமண் சவடியும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் எனக் கூறியுள்ளார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குல்பர்கா எம்.எல்.ஏ கனீஸ் பாத்திமா முதல்வரைத் தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வசம் ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில் தொழிலதிபருக்கு கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்!

டி.கே. சிவகுமார் - சித்தராமையா

பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தபோது, ​​டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் ஓட்டலுக்கு வந்து தலைவர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் ஹோட்டல் வாயிலில் ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிலையில், இன்று மே 15ஆம் தேதி டி.கே. சிவகுமார் தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் பரிசாக தங்கள் தலைவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், காங்கிரஸ் மேலிடம் அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுதான் உண்மையான 007! ஸ்வீடனில் கில்லர் லுக்கில் அமைச்சர் ஜெய்சங்கர்!

click me!