பீகாரில் கம்பத்தில் அதிகாரியை கட்டி வைத்த விவசாயிகள்: வைரல் வீடியோ!!

By Raghupati RFirst Published Aug 30, 2022, 5:18 PM IST
Highlights

பீகாரில் உள்ள மோதிஹரியில் அரசு அதிகாரி ஒருவர், உரத்தை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் வியாபாரம் செய்ததால் கோபமடைந்த விவசாயிகள் கம்பத்தில் கட்டி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பீகாரில் உள்ள மோதிஹரியில் அரசு அதிகாரி ஒருவர், உரத்தை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் வியாபாரம் செய்ததால் கோபமடைந்த விவசாயிகள் கம்பத்தில் கட்டி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பீகார் விவசாயத் துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் நிதின் குமார். தனக்கு நேர்ந்த அவலத்தை தொலைபேசியில் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம்.

மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

கூடுதல் விலைக்கு உரம் விற்றதால் விவசாயிகள் இவரை கம்பத்தில் கட்டி வைத்தனர். உரத்தை பதுக்கியும் வந்துள்ளார். இதனால், எந்த விலை கொடுத்தாலும் தங்களுக்கு உரம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  உர விற்பனையாளர்களுடன் கைகோர்த்து விலையை ஆலோசகர் நிதின் குமார் உயர்த்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மூட்டை யூரியா ரூ.265க்கு அரசால் விற்கப்படுவதாகவும், அதே அளவு உள்ளூர் கடைக்காரர்களால் ரூ.500-600க்கு விற்கப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும், உள்ளூர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. குமாரை விடுவிக்க விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. விவசாயத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அரசு விலையில் பெற்றுத் தருவதாக உள்ளூர் நிர்வாகம் உறுதியளித்ததாக அப்பகுதியின் வட்ட அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் சமாதானம் அடைந்தனர். 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

खाद की कालाबाज़ारी से तंग आकर मोतिहारी में कृषि सलाहकार को किसानों ने खंभे से बांध दिया ⁦⁩ pic.twitter.com/UMfOKrug79

— manish (@manishndtv)

கடந்த மாதம், பீகாரில் உள்ள ஜெகனாபாத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை அளித்து இருந்தது. அந்த வீடியோவில் மாணவர்கள் மரம் வெட்டுவது, கற்களை வெட்டுவது மற்றும் நிலத்தை தோண்டுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மாவட்டக் கலெக்டர், இந்த விஷயம் தனக்குத் தெரியும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!

click me!