மதுபானக் கடைகள் திறக்க அங்கீகாரம் வழங்குவதில் கடுமையான விதிகள் கடைபிடிக்கப்படும் என்று நீங்கள் எழுதிய புத்தகத்தில் இருப்பதை மறந்துவிடாதீர்கள் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
மதுபானக் கடைகள் திறக்க அங்கீகாரம் வழங்குவதில் கடுமையான விதிகள் கடைபிடிக்கப்படும் என்று நீங்கள் எழுதிய புத்தகத்தில் இருப்பதை மறந்துவிடாதீர்கள் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் காந்தியவாதி அண்ணா ஹசாரே. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை எடுத்து நடத்தியபோது, அதில் அண்ணா ஹசாரேவுடன் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் பணியாற்றினார். அதன்பின் ஆம் ஆத்மி கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார்.
அண்ணா ஹசாரேவுடன் இணைந்து பணியாற்றி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென அரசியலுக்குள் புகுந்து தனக்கென ஒரு பாதையை வகுக்கத் தொடங்கினார். இருப்பினும் தன்னோடு கெஜ்ரிவால் இருந்த காலத்தில் கடைபிடித்த கொள்கைகள், சிந்தனைகளை நினைவுபடுத்தி அண்ணா ஹசாரே முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காந்தியவாதி அண்ணா ஹசாரே எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கலால்வரிக் கொள்கை தொடர்பாக டெல்லி அரசு கடைபிடிக்கும் கொள்கைகளை ஊடகங்களில் பார்த்து எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அரசியலுக்குள் நீங்கள் நுழையும் முன், “ஸ்வராஜ்ஜியம்” என்ற புத்தகத்தை நீங்கள் எழுதினீர்கள்.
ந்தப் புத்தகத்துக்கு முகவுரையை என்னை எழுதக்கேட்டீர்கள். நீங்கள் எழுதிய அந்தப் புத்தகத்தில் சில பெரிய விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தீர்கள். முக்கியமாக கலால் வரிக்கொள்கையை குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த கடிதத்தில் கலால் வரிக்கொள்கை குறித்து உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
மதுபானக் கடைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கடினமான சட்டங்கள், விதிமுறைகள் கொண்டுவரப்படும் என கெஜ்ரிவால் அந்தப் புத்தகத்தில் தெரிவித்திருந்தார். கிராமங்களிலும், நகர்புறங்களிலும் மதுபானத்தின் கேடுகள், பிரச்சினைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்தீர்கள்.
ஆனால், நீங்கள் டெல்லி முதல்வராகியவுடன் உங்கள் சிந்தனையை, சித்தாந்தங்களை மறந்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் அரசு டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்குகிறது. உங்கள் கொள்கைகளால் மதுபானக் கடைகள் அதிகரிக்கும், மதுக்குடிப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அனைத்து வழிச்சாலைகளிலும் மதுக்கடைகளைத் திறக்கலாம். இதனால் ஊழல் பெருக வழிவகுக்கும். இது மக்கள் நலனுக்கானது அல்ல. அதிகார போதை உங்களுக்கு தலைக்கு ஏறிவிட்டது
இவ்வாறு அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.