
காதலுக்கு கண்ணில்லை என்றும், காதல் உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்றும் சினிமாவில் தான் வசனம் பேசமுடியும், நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்துவராது என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், பணியின் போது நடந்த விபத்தில் கால்களை இழந்தவரை 8 வருடங்கள் காத்திருந்து சபிதா என்ற பெண் திருமணம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் உண்மைக்காதலுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.
கேரள மாநிலம் வயல்நாடு அடுத்த வெங்கடப்பள்ளி பகுதியை சேர்ந்த சிவதாசன் என்பவர் தனது முறைப்பெண்ணான சபிதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். சிறு வயதிலேயே இவர் தான் மாப்பிள்ளை, இவர் தான் பொண்ணு என்று இருவீட்டார் பெற்றோரும் பேசி வைத்துவிட்டனர். இந்நிலையில், பணியின் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சிவதாசனின் கால்கள் செயலிழந்து போனது.
மருத்துவர்கள் கூட இவரால் இனி நடக்க முடியாது என்று கூறிய போதும் எனக்கு கணவனாக வந்தால் இவர் தான். இவருக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டும் என்றால் காத்திருப்பேன் என்று கூறினார். இதனையடுத்து, 8 ஆண்டுகளாக காத்திருந்த சபிதாவே சிவதாசனை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.