கடந்த 2021ம்ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் அதாவது 70ஆயிரம் பேர் இரு சக்கரவாகனங்கள் ஓட்டிச் சென்று உயிரிழந்தவர்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ம்ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் அதாவது 70ஆயிரம் பேர் இரு சக்கரவாகனங்கள் ஓட்டிச் சென்று உயிரிழந்தவர்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) 2021ம்ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021ம் ஆண்டில்சாலை விபத்துகளில் ஒருலட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 69ஆயிரத்து 240 பேர் இரு சக்கரவாகனம் ஓட்டிச் சென்று சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள். ஏறக்குறைய 44.50 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள்தான் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து கார் ஓட்டிச் சென்றுவிபத்தில் சிக்கி 15 சதவீதம் பேர், அதாவது 23,531 பேர் உயிரிழந்துள்ளனர். டிரக் மற்றும் லாரிகள் மூலம் 9 சதவீதம் பேர் அதாவது 14,622 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இரு சக்கரவாகன விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் கடந்த ஆண்டில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக நடந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இருசக்கர வாகனங்கள் ஓட்டி விபத்துகளில் சிக்கி (11.9%)8,259 பேர் உயிரிழந்துள்ளனர். 2வதாக உத்தரப்பிரதேசத்தில் 7,429 பேரும்(10.3%) உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலான விபத்துகள் எஸ்யுவி கார்கள், ஜீப்களால்தான் நிகழ்கின்றன. 4,039 விபத்துகளில் 23,531 பேர் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். லாரிகள்,டிரக்குகள் மூலம் நிகழ்ந்த விபத்துகளில் மத்தியப் பிரதேசத்தில்(23.4%) 3,423 விபத்துகளில் 14,622 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்துகள் மூலம் நிகழ்ந்த விபத்துகளில் தமிழகம், உ.பி.யில் அதிகபட்சமாக உயிரிழப்புகள்நடந்துள்ளன. தமிழகத்தில் 551 பேருந்து விபத்துகளில் 4,622 பேர்(11.9%) உயிரிழந்துள்ளனர்.
‘துணிச்சல் இருந்தால் பாஜக என்னை கைது செய்யட்டும்: தவறை உணர்வார்கள்’: மம்தா பானர்ஜி சவால்
உத்தரப்பிரதேசத்தில் 1337 விபத்துகளில் 4,622 பேர் உயிரிழந்துள்ளனர். பிஹாரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வாகனங்கள் மோதியதில் மட்டும் 2, 796 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாத வாரியாக நடந்த சாலை விபத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 40,235 சாலை விபத்துகள் நடந்துள்ளன. பெரும்பாலான விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 9மணிக்குள்ளாக நடந்துள்ளன. இந்த நேரத்தில் மட்டும் 81,410 விபத்துகள் நடந்துள்ளன. ஒட்டுமொத்த விபத்துகளில் இந்த நேரத்தில் மட்டும்20%விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
மாலை 6 மணி முதல் இரவு 9மணிவரை நிகழ்ந்த சாலை விபத்துகளில் அதிகபட்சமாக தமிழகத்தில் நடந்துள்ளன, இந்த நேரத்தில் தமிழகத்தில் 14,415 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அடுத்ததாக மத்தியப்பிரதேசத்தில் 9,798, கேரளாவில் 6,765 விபத்துகள் நடந்துள்ளன.
பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிக்குள் 17.8% அதாவது 71,711 விபத்துகளும் மற்றும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை 15.5% அதாவது 62,587 விபத்துகளும் நடந்துள்ளன.
சாலை விபத்துகளில் அதிகபட்சமாக தேசிய நெடுஞ்சாலையில்தான் நிகழ்ந்துள்ளன.ஒட்டுமொத்த விபத்துகளில் 34.5 சதவீதம் அதாவது 53,615 விபத்துகள் நடந்துள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில் 25.1% அதாவது 39,040 விபத்துகள் நடந்துள்ளன. ஒட்டுமொத்தமாக பிற சாலைகளில் நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 62,967 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் பெரும்பாலும் உ.பி.நெடுஞ்சாலையில் 13.5 சதவீதம் அல்லது 7,212 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 சதவீதம், 5,360 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 7.5 சதவீதம் 3,996 பேர், ராஜஸ்தானில் 6.8சதவீதம், 3653 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.