மகாத்மா காந்திக்குபின் மக்களின் மனதைப் புரிந்துக்கொண்டு, அவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடிதான் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
மகாத்மா காந்திக்குபின் மக்களின் மனதைப் புரிந்துக்கொண்டு, அவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடிதான் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
டெல்லியில் நேற்று “தி ஆர்கிடெக்ட் ஆஃப் நியூ பிஜேபி: ஹவ் நரேந்திர மோடி டிரான்ஸ்பார்ம்டு தி பார்ட்டி” என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தகத்தை பத்திரிகையாளர் அஜெய் சிங் எழுதியுள்ளார்.தற்போது குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலராக பணியாற்றி வருகிறார்.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதில்அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியின் நிர்வாகம், அமைப்புரீதியாக கட்டுப்படுத்தும் திறன் ஆகியவற்றுக்கு முன் சமகால அரசியலில் எந்த ஒரு தலைவரும் இல்லை. மோடியின் நவீன திட்டங்கள், புத்தாக்க சிந்தனைகள், சித்தாந்தங்களை சமரசம் செய்யாத திறன் ஆகியவற்றால் பாஜகவை தேர்தலில் வெல்லும் மெஷினாக மாற்றிவிட்டார்.
flood in pakistan: பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டுமா இந்தியா? பிரதமர் மோடி வேதனையுடன் ட்வீட்
கடந்த 8 ஆண்டுகளில் பாஜகவின் சித்தாந்தம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் கட்சியின் வெற்றிப்பயணத்திற்கு பங்களித்திருக்கலாம், ஆனால் இந்த கருத்தை மக்களிடம் கொண்டு சென்று நம்பிக்கையை வென்றெடுத்ததில் மோடியின் உத்திக்கு இணை இல்லை.
ஆர்எஸ்எஸ், பாஜக தனக்கு எந்தப் பணியை வழங்கினாலும் அவர்கள் எதிர்பார்ப்பைவிட அதிகமாக மோடி வழங்கினார். சுதந்திரஇந்தியாவில் இப்போது அவருக்கு இணையான தலைவர் யாருமில்லை
பிரதமர் மோடியின் புத்தாக்க அணுகுமுறை, மாற்றங்கள், பாரம்பரிய முறையில் கட்சி செயல்படுவதிலிருந்து வேறுபட்டதாக அமைந்திருந்தது.
மோடியின் புகழ் இந்தியாவில் இந்தியர்களோடு மட்டுமல்லாது, வெளிநாடு மக்களிடமும், தலைவர்களிடமும் பரவியது.
நீண்டகாலமாக ஆட்சியில் இருப்பவர்கள் மீது ஆட்சி பற்றி சலிப்பு, குறை வருவது இயல்புதான். இருப்பினும் பிரதமரைக் கண்டு மக்கள் சோர்வடையவில்லை.
சாதி, மதம், சமூகத்தைக் கடந்து, உடைத்து பிரதமர் மோடி தனக்கென ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளார். இவருக்கு பதிலடி கொடுக்க பல முயன்றாலும் முடியவில்லை.
மகாத்மா காந்திக்குப்பின் மக்கள் மனதை, உணர்வுகளைப் புரி்ந்து கொண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் நான் நம்புவது அது பிரதமர் நரேந்திர மோடிதான். இதைச் சொல்ல எனக்குத் தயக்கம் ஏதும் இல்லை.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்