Ola, Uber-க்கு குட்பை.. ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் Bharat Taxi App சேவை.. முழு விபரம் இதோ

Published : Dec 30, 2025, 12:53 PM IST
bharat taxi

சுருக்கம்

பாரத் டாக்ஸி ஆப் என்ற புதிய அரசு ஆதரவு செயலி 2026 முதல் நாடு முழுவதும் அறிமுகமாகிறது. ஓலா, உபேர் போன்ற செயலிகளுக்கு மாற்றாக, 0% கமிஷன் மற்றும் உயர்வு விலை இல்லாத நியாயமான கட்டணத்தில் இது செயல்படும்.

பாரத் டாக்ஸி ஆப் என்ற புதிய அரசு ஆதரவு பெற்ற செயலி, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் சேவையைத் தொடங்க உள்ளது. ஓலா, உபேர் போன்ற தனியார் கேப் செயலிகளுக்கு அடிக்கடி கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகளை சலிப்படையச் செய்து இந்த புதிய செயலி வரவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் இல்லாமல், நியாயமான விலையில் பயணத்தை வழங்குவதே இந்த செயலியின் முக்கிய நோக்கம்.

இந்த திட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த செயலி தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து டிரைவர்களை விடுவித்து, அவர்களை நேரடியாக பயணிகளுடன் இணைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓட்டுநர்களின் வருமானம் பாதுகாக்கப்படும் என்றும், பயணிகளுக்கு வெளிப்படையான கட்டண முறை கிடைக்கும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது Sahakari Taxi Cooperative Limited என்ற கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படுகிறது. AMUL, IFFCO, NABARD, NAFED, NDDB, KRIBHCO போன்ற முக்கிய தேசிய நிறுவனங்கள் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளன. உலகிலேயே முதன்முறையாக, முழுவதும் ஓட்டுநர்களுக்கு சொந்தமான தேசிய மொபிலிட்டி பிளாட்ஃபாரமாக இது அறிமுகமாகிறது. தற்போது டெல்லி மற்றும் குஜராத்தில் 51,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இதில் இணைந்துள்ளனர். 

முக்கியமாக, இதில் 0% கமிஷன் முறை பின்பற்றப்படுவதால், பயணிகள் செலுத்தும் முழு கட்டணமும் நேரடியாக ஓட்டுநர்களுக்கே கிடைக்கும். தனியார் கேப் செயலிகளில் காணப்படும் "உயர்வு விலை" இங்கு இல்லை. கட்டணம் எப்போதும் தெளிவாகவும் நிலையாகவும் இருக்கும். டெல்லி போலீசுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகள், நேரலை இருப்பிட பகிர்வு, கடுமையான டிரைவர் சரிபார்ப்பு போன்ற அம்சங்களும் இதில் இடம் பெறுகின்றன. 

பைக், ஆட்டோ, டாக்சி, பெரிய வாகனங்கள் என அனைத்திற்கும் ஒரே செயலி போதும். 24×7 வாடிக்கையாளர் பராமரிப்பு வசதியும் உள்ளது. இந்த செயலி Google Play Store மற்றும் Apple App Store-ல் பதிவிறக்கம் செய்யலாம். அரசு தரப்பில், இது கிராமப்புற வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

17 வயதிலேயே மலர்ந்த காதல்... பிரியங்கா காந்தி வீட்டில் டும்டும்..!
புத்தாண்டு பரிசு.. ஜனவரி 1 முதல் இண்டிகோ விமானிகளுக்கு பெரிய சம்பள உயர்வு