இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!

Published : Dec 29, 2025, 09:39 PM IST
randhir jaiswal

சுருக்கம்

இந்தியாவில் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான வன்முறை குறித்து அவர் குரல் கொடுத்திருந்தார். இந்த சம்பவங்களை அறிந்துகொண்டு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடப்பதாக பாகிஸ்தானின் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் கருத்தை வெளியுறவு அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் தன் நாட்டுக்குள் பார்க்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து, ‘‘ கருத்து தெரிவிப்பதற்கு முன் பாகிஸ்தான் தனது சொந்த நாட்டுக்குள் நடப்பதை பார்க்க வேண்டும்.பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் நிலை உலகிற்குத் தெரியும். பாகிஸ்தான் தனது உண்மையை மறைக்க முடியாது’’ என்று கூறினார்

.

பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி, ‘‘இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்தார். இந்தியாவில் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான வன்முறை குறித்து அவர் குரல் கொடுத்திருந்தார். இந்த சம்பவங்களை அறிந்துகொண்டு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண் மருத்துவரை தனது ஹிஜாபை கழற்ற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை அவர் தொந்தரவாகவும் வெட்கக்கேடாகவும் தெரிவித்தார்.

புல்டோசர் நடவடிக்கை, கும்பல் படுகொலை, அக்லாக் போன்ற விவகாரங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு நிதியுதவி பிரச்சாரம் நடப்பதாக அந்த்ராபி குற்றம் சாட்டினார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்தக் கருத்துக்களை முற்றிலுமாக நிராகரித்தார். பாகிஸ்தான் மிகவும் மோசமான பதிவைக் கொண்டுள்ளது என்றும், இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக அதன் சொந்த நாட்டில் நடப்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று இந்தியா கூறியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தப்பியோடியும் இந்தியாவுக்கு எதிராக வாய்க்கொழுப்பு... கடுப்பான மத்திய அரசு..! கதறும் லலித் மோடி..!
ஆரவல்லி மலைத்தொடர் வழக்கில் திருப்பம்! முந்தைய உத்தரவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!