கொரோனாவிற்கு எதிராக வீரியத்துடன் செயல்படும் கோவாக்சின் - பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

By karthikeyan VFirst Published May 16, 2021, 5:14 PM IST
Highlights

இந்தியா மற்றும் பிரிட்டனில் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி வீரியத்துடன் செயல்படுவதாக அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியையும், சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்டு என்ற தடுப்பூசியையும் உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 உள்நாட்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய, வெளிநாட்டு தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்து பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்லும் பேராயுதம் என்ற முழக்கத்துடன் தடுப்பூசி அதிவேகமாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு போடப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி வீரியமாக செயல்படுவதாக அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வைரஸ் வகைகளான முறையே B.1.617 மற்றும் B.1.1.7 ஆகியவற்றிற்கு எதிராக கோவாக்சின் வீரியமாக செயல்படுகிறது. 

கோவாக்சின் மீண்டும் ஒரு முறை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆய்வில், கோவாக்சின் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!