எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள்... கைகூப்பி மன்றாடும் நோயாளிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 14, 2021, 6:12 PM IST
Highlights

ஆந்திராவில் இருந்து கொரோனா நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களை அனுமதிக்க வேண்டுமென, தெலுங்கானா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ஆந்திராவில் இருந்து கொரோனா நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களை அனுமதிக்க வேண்டுமென, தெலுங்கானா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி பெறாமல் ஆந்திராவில் இருந்து கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களை, தெலுங்கானா எல்லையில் அம்மாநில அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆந்திராவில் இருந்து செல்லும் கொரோனா நோயாளிகளுக்கு, தெலுங்கானாவில் உள்ள எந்த மருத்துவமனையிலும் அனுமதி மற்றும் படுக்கை உறுதிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் ஆம்புலன்ஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதைப்போல சம்பவம், இன்று கட்வல் சோதனை சாவடியில் அரங்கேற்றப்பட்டது. நோய்வாய்ப்பட்ட தமது கணவனை ஆம்புலன்சில் கொண்டு சென்ற பெண், தெலுங்கானாவுக்கு செல்ல தங்களுக்கு அனுமதி வழங்குமாறு, அதிகாரிகளிடம் கைக்கூப்பி வேண்டிக் கொண்டார். 

எல்லையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவது தொடர்பாக, தெலுங்கானா போலீசார் மற்றும் அதிகாரிகளை கடுமையாக சாடிய தெலுங்கானா உயர் நீதிமன்றம், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களை எல்லையில் தடுத்து நிறுத்த தெலுங்கானா அரசுக்கு அதிகாரம் இல்லை என உத்தரவிட்டுள்ளது. மேலும், மற்ற மாநிலங்களின் மக்களுக்கு மட்டுமல்ல, ஹைதராபாத்தில் வசிப்பவர்களுக்கு கூட தெலுங்கானா மருத்துவமனைகளில் படுக்கைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

click me!