Bengaluru: rain in bangalore:பெங்களூருவில் ரூம் வாடகை ரூ.40ஆயிரமாம்! இன்னும் 3 நாட்களுக்கு மழையா!மக்கள் பீதி

By Pothy RajFirst Published Sep 7, 2022, 3:17 PM IST
Highlights

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஹோட்டல் அறை வாடகை ஓர் இரவுக்கு ரூ.40ஆயிரமாக அதிகரித்துள்ளது. அனைத்து ஹோட்டல் அறைகளும் நிரம்பிவழிவதால், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஹோட்டல் அறை வாடகை ஓர் இரவுக்கு ரூ.40ஆயிரமாக அதிகரித்துள்ளது. அனைத்து ஹோட்டல் அறைகளும் நிரம்பிவழிவதால், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இ்ந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளி்ல உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

பெங்களூரு வெள்ளம்:கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்க்க காரணம் என்ன?

மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தாதல் பலரும் உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும், அலுவலகத்திலும் தங்கியுள்ளனர். சிலர் வேறு வழியின்றி ஹோட்டலில் தற்காலிகமாகத் தங்கலாம் என்று முடிவு எடுத்து அறை வாடகை கேட்டவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பெங்களூருவில் ஒருநாள் இரவுக்கு ரூ.30ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை வாடகையை உயர்த்தி ஹோட்டல் நிர்வாகங்கள் அறிவித்தன. சாதாரண ஹோட்டல்களில் அறை வாடகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை கேட்கப்படுகிறது.

விமானநிலைய பாதுகாப்பு தனியார் வசம் செல்கிறது! 3,000 சிஎஸ்ஐஎப் பணியிடங்கள் நீக்கம்

பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஒரே நாள் இரவில் 130மில்லிமீட்டர் மழை பதிவானதால் நகரே வெள்ளத்தில் மிதக்கிறது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது, இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். நீர் மட்டம் அதிகமான பகுதிகளில் மக்கள் படகுமூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூருவில் 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவைவிட்டு மக்கள் வெளியேறமுடியாத வகையில் வெள்ளக்காடாக நகரம் காட்சியளிக்கிறது. இந்நிலையி்ல் வெள்ளநீர்வடியும் வரை ஹோட்டலில் அறை எடுத்து தங்க நினைத்தவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: காங்கிரஸ்தான் காரணம்: கர்நாடக முதல்வர் மழுப்பல்

பர்ப்பள் பிரன்ட் டெக்னாலஜி நிறுனத்தின் சிஇஓ மீனா கிரிஸ்பில்லா கூறுகையில் “ பழைய விமானநிலைய சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருநாள் இரவுக்கு எங்கள் குடும்பத்தினர் ரூ.42 ஆயிரம் வாடகை கொடுத்து தங்கினோம்”எனத் தெரிவித்தார்

மேலும் ஒயிட்பீல்ட், அவுட்டர் ரிங் ரோடு, ஓல்டு ஏர்போர்ட்ரோடு, கோரமங்களா ஆகியவற்றில் இருக்கும் ஹோட்டல்களில் அறைகள் அடுத்த ஒரு வாரத்துக்கு முழுமையாக புக் ஆகியுள்ளன எனத் தெரிவித்துள்ளன.

தொடரும் கனமழை… மஞ்சல் அலர்ட் எச்சரிக்கை… வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்… என்ன ஆகுமோ பெங்களூர்!!

நட்சத்திர ஹோட்டல்களில் விசாரித்தபோது, அடுத்த 15 நாட்களுக்கு அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அறைகள் ஏதும் காலியாக இல்லை எனத் தெரிவித்துள்ளன.

click me!