நாட்டில் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு பரப்பப்படுகிறது. இதைத் தடுக்காவிட்டால் உள்நாட்டு போர் உருவாகும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார்.
நாட்டில் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு பரப்பப்படுகிறது. இதைத் தடுக்காவிட்டால் உள்நாட்டு போர் உருவாகும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற நடைபயணத்தை இன்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறார். மொத்தம் 150நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்குச் செல்கிறார்.
இந்த நடைபயணத்துக்காக நேற்று சென்னை வந்த ராகுல் காந்தி இன்று காலை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரின் தந்தை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் திருவனந்தபுரத்துக்கு தனிவிமானத்தில் ராகுல் காந்தி புறப்பட்டார். திருவனந்தபுரம் வந்தபின் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு நடைபயணத்தை கொடிஅசைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கன்னியாகுமரியில் குழுமியுள்ளனர். கண்ணையாகுமார், ராஜஸ்தான் முதல் அசோக் கெலாட், மாநிலத் தலைவர்கள் பலர் வந்துள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ காங்கிஸ் கட்சிக்கு ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். ராகுல் காந்தி தலைமையில் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம். நாட்டின் முன் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வந்தால், அந்த சவால்களை எளிதாகச் சமாளிப்பார்.
சுதந்திரத்துக்குப்பின் முதல்முறையாக “பாரத் ஜோடோ” என்று(இந்தியா ஒற்றுமை) எனும் முழுக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார்கள். வெறுப்பு, பதற்றம்,வன்முறைநிலவுகிறது. ஒட்டுமொத்த தேசமும் இதுகுறித்து கவலைப்படுகிறது.
பஞ்சாப் அரசின் கஜானா காலி! அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தவிப்பு
மக்களிடையே அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் நிலவ வேண்டும், வன்முறையை மக்கள் தாங்கமாட்டார்கள் என்று கூறுங்கள் என்று பிரதமர் மோடியிடம் நாங்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரை பிரதமர் மோடி அதைக் கேட்கவில்லை.
அதிகமான பிரிவனைகள் நடக்கின்றன. சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பு உருவாகிறது. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்லும். ராகுல் காந்தி அஹிம்சை மீது நம்பிக்கை வைத்துள்ளார். அவரின் மனதில் வெறுப்பு இல்லை.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்