அந்தரங்க புகைப்படங்களை டெலிட் செய்ய காதலனின் ஃபோனை பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

By Ramya s  |  First Published Nov 29, 2023, 12:09 PM IST

பெங்களூருவைச் சேர்ந்த 22 வயதான தான்வி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலனனின் செல்போனின் கேலரியைத் திறந்து பார்த்த போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது


காதல் என்ற பெயரில் எல்லை மீறி பழகுவது, பின்னர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 22 வயதான தான்வி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலனனின் செல்போனின் கேலரியைத் திறந்து பார்த்த போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் போனில் தனது புகைப்படங்கள் உட்பட பல்வேறு பெண்களின் சுமார் 13,000 நிர்வாண புகைப்படங்களை இருந்ததை பார்த்துள்ளார்..

தான்வியும் அவரின் காதலரான 25 வயதான ஆதித்யா சந்தோஷ் ஒரே பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 5 மாதங்களுக்கு முன்பு ஆதித்யாவை தான்வி சந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அவர்கள் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் அவ்வபோது நெருக்கமாக இருந்துள்ளனர். ஆனால் தங்கள் அந்தரங்க தருணத்தை சந்தோஷ் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். எனவே சந்தோஷிற்கு தெரியாமல் அவரின் செல்போனில் உள்ள புகைப்படங்களை நீக்குவதற்காக அவரின் செல்போனை பார்த்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது தான் சந்தோஷின் செல்போனில் 13,000 நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை பார்த்துள்ளார். இதனால் கலக்கமடைந்த அவர், சந்தோஷ் உடனான உறவை உடனடியாக துண்டித்துக்கொண்டார், மேலும் எதிர்காலத்தில் எந்த  தனது மற்ற சக ஊழியர்களை காப்பாற்றவும் கடந்த 20-ம் தேதி தனது அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளிடம் விஷயத்தை தெரிவித்தார். சந்தோஷின் ஃபோனில் இருந்த 13,000 நிர்வாணப் படங்களில், சில பெண் சகாக்களும் இருந்தனர்.

நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட பெல்லந்தூரைச் சேர்ந்த பிபிஓ நிறுவனம், நவம்பர் 23 அன்று சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது முறையான புகார் அளித்தது. அலுவலகத்தில் மற்ற பெண்களுக்கு சந்தோஷ் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்றாலும் அவனுடைய எண்ணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. புகைப்படங்கள் கசிந்திருந்தால் அது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்பதால் நாங்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளோம் என்று அந்த அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புகைப்படங்களை மார்பிங் செய்ய சந்தோஷ் நிறுவனத்தின் எந்த சாதனத்தையும் பயன்படுத்தவில்லை என்று நிறுவனம் மேலும் தெளிவுபடுத்தியது. இதற்கிடையில், போலீசார் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது அலுவலகத்தில் இருந்து அவரை கைது செய்துள்ளனர். இருப்பினும், சந்தோஷ் இத்தனை நிர்வாண புகைப்படங்களை சேமித்து வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கேரளாவில் 2023ம் ஆண்டு கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 115.. வெளியான அதிர்ச்சி புள்ளி விவரம்.!

சந்தோஷின் போனில் இருந்த புகைப்படங்களில் சில மார்பிங் செய்யப்பட்டவை மற்றும் சில உண்மையானவை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த புகைப்படங்களை பயன்படுத்தி அவர் யாரேனும் பெண்ணை பிளாக்மெயில் செய்தாரா என்பதையும் சரிபார்த்து வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் செல்போன் சேட் வரலாறு மற்றும் தொலைபேசி அழைப்புகளை சரிபார்த்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!