rain in bangalore: மிரட்டும் மழை! பெங்களூருவுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை: இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் முயற்சி

By Pothy Raj  |  First Published Sep 8, 2022, 11:14 AM IST

பெங்களூருவில் இன்னும் 2 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இருப்பினும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்ப முயன்று வருகிறார்கள்.


பெங்களூருவில் இன்னும் 2 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இருப்பினும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்ப முயன்று வருகிறார்கள்.

பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி, திங்கள்கிழமை வரை 130 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெங்களூருநகரமே வெள்ளக்காடானது.

Tap to resize

Latest Videos

பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கும் கோடீஸ்வரர்களின் சொகுசு பங்களாக்கள்: சிஇஓக்கள் படகில் மீட்பு

அதன்பின் பெங்களூரு நகரை மழை விடாது வெளுத்து வாங்கி வருகிறது. நகரின் முக்கிய பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், தாழ்வான பகுதிகள், வர்த்தக கட்டிடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புபகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த அடைமழையால், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கும்ஆதாரங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பல ஏரிகள் நிரம்பி வழிவதால், அந்த தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு நகரில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நீர் மெல்ல வடியத் தொடங்கியிருப்பதால், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்கள் வெளியேவருவதற்கு முயற்சித்து வருகிறார்கள். 

பட்டர் மசாலா தோசை சாப்பிடுங்க! பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வியால் நெட்டிஸன்கள் கொந்தளிப்பு

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியிலும், தண்ணீரை வெளியேற்றும் முயற்சியிலும், தேங்கிகிடக்கும் குப்பைகளை அகற்றுவதிலும் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால், மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும்மின்இணைப்பு வழங்கப்படாததால் தொடர்ந்து இருள்சூழ்ந்துள்ளது. குடிநீர் இல்லை என்பதால், அப்பகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளநர். அங்கு இயல்புநிலையை கொண்டு வர அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.

சாலையில் தேங்கியிருந்த நீர் பெரும்பாலும் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு வாகனங்கள் விரைவாகச் செல்ல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவுட்டர் ரிங் ரோடு, மராதாஹல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மழை நீர்வடியவில்லை. இதனால் மோட்டார் மூலம் வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூருவில் ரூம் வாடகை ரூ.40ஆயிரமாம்! இன்னும் 3 நாட்களுக்கு மழையா!மக்கள் பீதி

கடும்மழையால் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், இருசக்கரவாகனங்கள், கார், பேருந்து மிகவும் மெதுவாக சென்று வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் வசித்த மக்கள் மழை சற்று குறைந்திருப்பதால் அங்கிருந்து வெளியேறி தங்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு மாறி வருகிறார்கள். சிலர் ஹோட்டலுக்கு தற்காலிகமாகத் தங்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், அறைகள் கிடைக்கவில்லை. 

ஏமலூர் குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில் “ மழை குறைந்திருப்பதால் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. என்னுடைய வீட்டை பார்க்க வந்தேன், மழைநீர் தேங்கியிருந்ததால் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை மீண்டும் வரக்கூடாது என்றுநம்புகிறேன்” 


எனத் தெரிவித்தார். வீடுகளின் கீழ்தளத்தில் ஜெனரேட்டர், யுபிஎஸ் வைத்திருந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர், இந்த மழையால் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளன. வீடுகளின் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனங்கள், கார் போன்றவை தண்ணீரில் மூழ்கின, அவற்றை சரிசெய்யும் பணியிலும் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
 

click me!