குஜராத்தில் இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாதநிலையில், காங்கிரஸ்கட்சி ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசியுள்ளார்.
குஜராத்தில் இன்னும் தேர்தல் அறிவிக்கப்படாதநிலையில், காங்கிரஸ்கட்சி ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் தொண்டர்களுக்கான பரிவர்த்தன் சங்கல்ப் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது, குஜராத் தேர்தல் இந்த ஆண்டுஇறுதியில் வரும்நிலையில் இப்போதே பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு ராகுல் காந்தி வழங்கிவிட்டார். அவர் பேசியதாவது:
nitish kumar: bihar: amit shah: அமித் ஷா வந்தாலே கலகம் வரும், அமைதி கெடும்! : நிதிஷ் குமார் காட்டம்
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 3ஆயிரம் ஆங்கில வழிப்பள்ளிக்கூடங்கள் உருவாக்கித் தரப்படும், பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.5 கூடுதலாக மானியமும் தரப்படும்.
குஜராத்தில் உலகிலேயே மிக உயரமாக சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை எழுப்பியுள்ளதாக பாஜக கூறுகிறது. ஆனால், அதன் செயல்பாடுகள் அனைத்தும் படேலுக்கு விரோதமாக இருக்கிறது
தொழிலதிபர்களுக்குதான் பாஜக அரசு கடன்தள்ளுபடி தருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கொடுத்து கேள்விப்பட்டுள்ளீர்களா. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிதரப்படும்.
அதுமட்டுமல்லாமல் தற்போது சிலிண்டர் ரூ.1000க்கும் மேல் உயர்ந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் 500ரூபாய்க்கு வழங்கப்படும். 300 யூனிட் வரை பொதுமக்களுக்கு இலவச மின்சாரமும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
சர்தார் படேலுக்கு மிக உயரமாக சிலை வைத்துள்ளதாக ஒருபுறம் பெருமையாகக் கூறிவிட்டு மறுபுறம் அவரை பாஜக வேதனைப்படுத்துகிறது. யாருக்காக சர்தார்படேல் போராடினார். இந்தியாவின் குஜராத்தின் விவசாயிகளின் குரலாக படேல் இருந்தார்.
ஆனால் விவசாயிகளுக்க எதிராக 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்து அவர்களின் உரிமைகளைப் பறித்தது. ஒருபுறம் படேலுக்கு சிலை மறுபுறம் படேல் யாருக்காக வாழ்ந்தாரோ,யாருக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தாரோ அந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவது. பின்னர் படேலுக்கு சிலை வைத்ததன் அர்த்தம் என்ன
குஜராத்தில் பாஜகஆட்சிக்கு வந்தபின் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றிவிட்டது. இங்கு இரு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. பாஜக கைப்பற்றியுள்ள ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எதிரான போட்டி.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்