Jharkhand:hemant soren: ஜார்க்கண்டில் தப்பித்தது சோரன் அரசு! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: பாஜக வெளிநடப்பு

By Pothy RajFirst Published Sep 5, 2022, 2:03 PM IST
Highlights

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. 

பாஜக எம்எல்ஏக்கள், கூட்டணியான ஏஜேஎஸ்யு கட்சியினர், சுயேட்சை இருவர் ஆகியோர்  சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

kejriwal: bjp:கெஜ்ரிவால் யோக்கியம் தெரிந்துவிட்டது! மதுபான வழக்கில் ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோவை வெளியிட்டது பாஜக

81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக 48 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஜார்க்கண்டில் நடந்த நிலக்கரி ஒதுக்கீடு வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவி செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, ஜார்க்கண்டில் ஆட்சி கவிழுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பாதுகாப்பாக ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

sitharaman:trs:ரூ.100 லட்சம் கோடி கடன்!ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.1.25லட்சம் கடன்’: நிர்மலாவை விளாசிய டிஆர்எஸ்

இந்நிலையில் ஒரு நாள் சிறப்பு சட்டப்ேபரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஹேமந்த் சோரன் நடத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன், சட்டப்பேரவையில் ஹேமேந்த் சோரன் பேசியதாவது “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பாஜக கவிழ்க்க திட்டமிட்டு செயல்படுகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் இதுபோன்று குழப்பத்தை விளைவித்து ஆட்சியைக் கலைக்க முயல்கிறது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி, போர் சூழல் போன்ற பதற்றத்தை நாட்டில் உருவாக்கி தேர்தல் நடத்தி அதன் மூலம் வெல்லபாஜக திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இருந்ததால் கூட்டணி ஆட்சி தப்பியது. 

Cyrus Mistry: Tata Sons: சைரஸ் மிஸ்திரி இறப்புக்கு இதுதான் காரணம்? 9 நிமிடங்களில் 20 கி.மீ!

காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கிவிடும், குதிரைபேரத்தில் ஈடுபடும் என்பதால், அனைத்துஎம்எல்ஏக்களும் அருகே இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ராய்பூரில் தங்கவைக்கப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆள்வதால் அங்கு பாஜக சதித்திட்டத்தை முறியடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரனும் எம்எல்ஏக்களுடன் தங்கியிருந்து, இன்று வந்து சேர்ந்தனர்.

click me!