தாரை தப்பட்டை இசைக்க பாரம்பரிய கிராமிய நடனத்துடன் குடியரசுதின அணிவகுப்பில் அய்யனார் சிலை கொண்டு வரப்பட்டது.
தேசத்தின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்த கொண்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
undefined
விழாவின் சிறப்பம்சமாக அந்தந்த மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பாக தமிழ்நாட்டின் காவல்தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் அய்யனார் சிலை கொண்டு வரப்பட்டது. சுமார் 17 அடி உயரத்தில் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்னால் குதிரையில் காவலாளியும், அருகே பூத கணங்களும் இருப்பது போல வடிமைக்கப்பட்டிருந்தது.
அவற்றுடன் தமிழகத்தின் பாரம்பரியமான நாட்டுப்புற இசை, நடனம், மேளம் ஆகியவையும் வந்து ராஜபாதையில் திரண்டிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது. அய்யனார் சிலை வந்தபோது அங்கிருந்த தமிழ் மக்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனிடையில் அய்யனார் சிலையில் பூணூல் அணிவிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு அய்யனார் சிவனின் அம்சமாக கருதப்படுவதால் பூணூல் அணிவிக்கப்பட்டிருப்பதாக சிலையை வடிவமைத்தவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: குடிபோதையில் இளம்பெண்ணுடன் உல்லாசம்..! பேத்தியை தொலைத்து பரிதவிக்கும் முதியவர்..!