இந்திய ஜனநாயகம் சோதிக்கப்படுகிறது: மவுனம் கலைத்த முன்னாள் குடியரசு தலைவர்..!

By Asianet TamilFirst Published Jan 25, 2020, 6:24 PM IST
Highlights

இந்திய ஜனநாயம் மீண்டும் சோதிக்கப்படுகிறது என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்தார். அதேசமயம் சமீபகாலமாக நடைபெறும் எந்தவொரு போராட்டத்தையும் குறிப்பிடாமல் அவர் இந்த கருத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசுகையில் கூறியதாவது:  நாட்டில் நடக்கும் அமைதியான போராட்டங்கள் ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கும். ஒருமித்த கருத்து ஜனநாயகத்தின் உயிர்நாடி. கேட்பது, விவாதிப்பது, வாதிடுவது மற்றும் கருத்து வேறுபாடு கூட ஜனநாயகம்தான். இணக்கான நிலை பெறுவதற்கு சர்வாதிகார போக்கு உதவும்.


இந்திய ஜனநாயம் மீண்டும் சோதிக்கப்படுகிறது.. கடந்த சில மாதங்களாக மக்கள் வீதிகளில் அதிக எண்ணிக்கையில் குறிப்பாக இளைஞர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தங்களது கருத்துக்களை கூறுவதை காண்கிறோம். அரசியலமைப்பின் மீதான இளைஞர்களின் உறுதியான நம்பிக்கையை பார்ப்பது மனதை கவருவதாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பிரணாப் முகர்ஜி தனது உரையில் தற்போது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை குறிப்பிடாமல் தனது கருத்துக்களை கூறியது குறிப்பிடத்தக்கது. பிரணாப் முகர்ஜி சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்வதற்கு தயங்கவும், விலகி செல்லவும் மாட்டார்.

click me!