மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிலத்தை தோண்டி மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள மங்காவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணி தேவைக்காக கிராவல் மண் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகில் உள்ள நிலத்தை தோண்டி மண் எடுக்கும் முயற்சியில் கட்டுமானப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மீண்டும் மணப்பெண் கோலத்தில் டிடி; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளினி
undefined
இதனிடையே தோண்டப்பட்ட நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறி மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்ற இரு பெண்கள் கட்டுமானப் பணியாளர்களை மண் எடுக்க விடாமல் தடுத்துள்ளனர். பலமுறை எடுத்துக் கூறியும் மண் எடுக்க அப்பெண்கள் அனுமதிக்காத நிலையில் ஆத்திரமடைந்த பணியாளர்கள் லாரியில் இருந்த மண்ணை இரு பெண்கள் மீதும் முழுவதுமாகக் கொட்டி அவர்களை மண்ணில் புதைத்துள்ளனர்.
சென்னை கடற்கரை - பல்லாவரம், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மண்ணில் புதைந்தவர்களை மீட்ட நிலையில் அதில் ஒரு பெண் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த நிலையில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இரு பெண்கள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.