மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்.ல் சேர தடை கிடையாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர் வன்முறை மற்றும் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டு கொன்றதால் கோட்சே உறுப்பினராக இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கடந்த 1948ம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார். அதன் பின்னர் சுமார் 18 மாதங்கள் கழித்து வல்லபாய் படேலே ஆர்எஸ்எஸ் மீதான தடையை அவரே நீக்கினார். இதனைத் தொடர்ந்து 1975ம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போதும், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலிலும் ஆர்எஸ்ஸ் மீது தடை விதிக்கப்பட்டு நீக்கப்பட்டது.
பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூருக்கு சென்று திரும்பிய குடும்பத்தினருக்கு நிகழ்ந்த சோக சம்பவம்
undefined
ஆர்எஸ்எஸ் மீது அவ்வபோது தடை விதிக்கப்பட்டு, நீக்கப்பட்டாலும் கடந்த 1966ம் ஆண்டு மத்திய அரசு பணியில் உள்ளவர்கள் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் மத்திய அரசு பணியாளர்கள் பங்கேற்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இச்செயலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.